Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
Android அல்லது iOS Smartphone இல் போலியான செயலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது?

Sooriyan FM Gossip - Android அல்லது iOS Smartphone இல் போலியான செயலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

533 Views
உங்கள் Android அல்லது iOS Smartphone இல் போலியான செயலிகளை (Fake Apps) எவ்வாறு கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய Smartphone உலகத்தில், காலையில் Good Morning Message ஐ அனுப்புவதில் தொடங்கி, சமைப்பதற்கு, சாப்பிடுவதற்கு, விளையாடுவதற்கு, தூங்குவதற்கு, உடல் நலனை கண்காணிப்பதற்கு, Shopping செய்வதற்கு என்று தொட்டதுக்கெல்லாம் ஏராளமான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் (Apps) இருக்கின்றன.

Android Phoneகளை பயன்படுத்துபவர்களுக்கு Google Play Storeலும், Appleஇன் iOS Phoneகளை பயன்படுத்துகின்றவர்களுக்கு App Storeலும் ஆயிரக்கணக்கான செயலிகள் இருக்கின்றன.

இதில் பல செயலிகள், உங்கள் மொபைலில் இருந்து முக்கியமான தரவைத் திருடக்கூடிய போலி அல்லது தீங்கிழைக்கும் செயலிகளாக உள்ளன.

இந்த போலி செயலிகள் பிரச்சினைகளை உருவாக்குகின்றன, Smartphone இன் செயல்திறனை மெதுவாக்குகின்றன, மேலும் உங்கள் மொபைலில் சேமிக்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் திருடுவதற்கு ஹேக்கர்களால் எளிதாக பயன்படுத்தப்படுகின்றன.

கடுமையான சரிபார்ப்பு செயல்முறை காரணமாக Apple இன் செயலி பாதுகாப்பானது என்று கருதப்பட்டாலும், App Store இன்னும் போலி Appகளை கொண்டுள்ளது.

இப்பொழுது நாங்கள்போலியான செயலிகளை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப்பற்றி இப்பொழுது நாங்கள் பார்க்கலாம்.

உங்கள் Android அல்லது iOS Smartphone இல் போலியான செயலிகளை (Fake Apps) நீங்களே கண்டுபிடித்து அதனை தவிர்த்துவிட சில வழிகள் இருக்கின்றன.

முதலில் செயலியை Install செய்வதற்கு முன்னர், அதனை வெளியிட்டது யார் (Publisher) என்பதைப் பார்க்க வேண்டும். மோசடி செய்பவர்கள் இதே போன்ற பெயர்களைப் பயன்படுத்துவதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

Apple இன் App Store மற்றும் Google இன் Play Store இல் reviews-ஐ பாருங்கள். ஒரு உண்மையான செயலில் ஆயிரக்கணக்கான நேர்மறையான மதிப்புரைகள் (Positive Review) இருக்கும்.

பின்னர் வெளியீட்டு திகதியைப் பாருங்கள். ஒரு Fake Application இல் அண்மைய வெளியீட்டுத் திகதியிருக்கும், உண்மையான செயலி "புதுப்பிக்கப்பட்ட" (updated) திகதியைக் கொண்டிருக்கும்.

தலைப்பு அல்லது விளக்கத்தில் எழுத்துப்பிழை தவறுகளை சரிபார்க்கவும். இந்த பயன்பாடுகள் பல சீனாவிலிருந்து வெளிவருகின்றன. Developerகளின் முதல் மொழி ஆங்கிலம் அல்ல எனில் கூடுதல் எச்சரிக்கையுடன் நீங்கள் இருக்க வேண்டும்.

Shopping தள்ளுபடி கொடுப்பதாக உறுதியளிக்கும் செயலிகளை நீங்கள் கவனமாக கையாள வேண்டும்.

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், ​​உங்களது browserஇல் நீங்கள் வாங்க நினைக்கும் ஒரு கடையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு, அதில் "Get our app" என ஒரு Icon அல்லது Button ஐ தேடுங்கள். அதனை Click செய்வதன்முலம், சரியான செயலியை பதிவிறக்கக்கூடிய App Store அல்லது Google Play Storeக்கு அழைத்துச் செல்லும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top