Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
தமிழ்நாட்டிற்குள் ஒரு நாடா....? - கொதிப்பில் வைகைப்புயல் வடிவேலு.

Sooriyan Gossip - தமிழ்நாட்டிற்குள் ஒரு நாடா....? - கொதிப்பில் வைகைப்புயல் வடிவேலு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

221 Views
தமிழ்நாட்டில் மு.க.ஸ்ராலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கான நிதியுதவியாக, பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பங்களிப்பு வழங்குகின்றனர்.

அந்தவகையில், சென்னை தலைமைச்செயலகத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்ராலினை சந்தித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தனது பங்களிப்பாக இந்திய நாணய மதிப்பில்
5 லட்சம் ரூபாவை நேரடியாகக் கையளித்ததன் பின்னர் ஊடகத்துறையினரையும் சந்தித்தார்.

இதன்போது முதலமைச்சருடனான சந்திப்பு, தற்போதைய அரசியல் நிலை மற்றும் தனது திரைத்துறை வாழ்க்கை பற்றி வடிவேலு கருத்துத் தெரிவிக்கையில், "மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்தது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. என்னை, குடும்பத்தில் ஒருத்தனாக நினைத்து மிகுந்த எளிமையுடன் பேசினார்.

தி.மு.க.வுக்கு ஆதரவளித்த பிறகு எனக்கு சினிமா வாய்ப்பு குறைந்ததாகவும் தற்போது தி.மு.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் அதிகமான திரைப்படங்களில் என்னை பார்க்கலாமா? என்று நீங்கள் கேட்டால், கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உத்துப்பார்க்கிற அளவுக்கு செயல்பட்டுள்ளது. கொரோனா பரவலை தி.மு.க. அரசு கட்டுப்படுத்தியுள்ளது. மக்களுக்கு மெய்சிலிர்க்கும் விஷயம் அது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெருத்தெருவாகச் சென்று தடுப்பூசிக்காக கெஞ்சி கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அந்த வகையில் மக்களை தன்வசப்படுத்தினார். யாருடைய மனதும் புண்படாதபடி பேசி, மக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் அவர் செயல்பட்டது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பஸ் பயணத்திட்டம் ஆகியவற்றால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஒவ்வொரு திட்டங்களையும் அவர் அழகாக நிறைவேற்றி வருகிறார். உண்மையிலேயே மக்களுக்கு இது பொற்காலமான ஆட்சி.

முகக்கவசத்தை சிலர் பொருட்படுத்துவதில்லை என்பது உண்மைதான். நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? என்று சிலர் பேசினர். ஆனால் அப்படிப்பட்ட நிலையும் குறைந்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் நிற்கின்றனர். இது மகிழ்ச்சியான விஷயம். நான் ஏற்கனவே தடுப்பூசி போட்டிருக்கிறேன். இது நன்மை தரும் விஷயம். எனவே அனைவருமே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். குழந்தைகள், குடும்பத்தை காப்பாற்ற இதுதவிர வேறு வழியில்லை. இதற்காக அரசு பல உதவிகளை செய்து வருகிறது. இது மக்களுக்கு நான் வைக்கும் அன்பான வேண்டுகோள்.

சினிமா தொழில் தற்போது OTT போன்ற அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது. தொழில்நுட்பமும் வளர்கிறது. அடுத்ததாக OTT வேறு வடிவில் வரும். இப்படி சினிமாத்துறை மாறி மாறி போய்க்கொண்டே இருக்கும். காலத்திற்குக் தகுந்தாற்போல் நாங்களும் நடித்துக்கொண்டே இருப்போம்.

தமிழ்நாட்டினுள்ளே கொங்கு நாடு என்று ஒரு பகுதியை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. ‘ராம்நாடு, ஒரத்தநாடு’ என்று பல நாடுகள் உள்ளன. இதையெல்லாம் பிரிக்க முடியுமா? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை ஏன் பிரிக்க வேண்டும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top