முன்னணி நடிகராக தமிழ் சினிமாவினையே கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யா.இவர் ஜூலை 23 ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடவிருப்பதனால் ,அவருடைய தீவிர ரசிகர்கள் தற்போது சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைத்தளத்தில் ஹாஸ்டேக் உருவாக்கி முற்கூட்டிய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#SuriyaBdayCDPCarnival என்ற ஹாஸ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
தற்போது சூர்யாவின் நடிப்பில் ,பாண்டியராஜனின் இயக்கத்தில் " சூர்யா 40 " எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.விரைவில் இத்திரைப்படத்தின் வெற்றிவிழாவையும் கொண்டாட காத்திருக்கின்றார்கள் சூர்யாவின் தீவிர ரசிகர்கள்.