Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
சத்தமின்றிச் சாதிக்கும் நடிகர் அருள்நிதி.

Sooriyan Gossip - சத்தமின்றிச் சாதிக்கும் நடிகர் அருள்நிதி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

300 Views
பெரும் ஆர்ப்பாட்டமெதுவுமின்றி அமைதியாக நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகின்றார் நடிகர் அருள்நிதி. 

திரைத்துறை மற்றும் மிகப்பெரும் அரசியல் பின்னணியைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் சத்தமின்றி தனது வேலையைக் கவனித்து வரும் நடிகர் அருள்நிதி, "வம்சம்" படத்தின் மூலம் திரைத்துறைக்குள் கால் பதித்த நிலையில், தற்போது வரை 14 திரைப்படங்கள் நடித்து வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்தநிலையில், அருள்நிதியின் 15வது திரைப்படமானது யூடியூப்பில் 'எருமைச்சாணி' தளத்தினூடாகப் பிரபலமடைந்த விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிப்பில் முழுமையடைந்துள்ள நிலையில், விரைவில் திரைகாணவுள்ளது.

இந்தப் படம் அண்மையில் திரைத்துறை சார்ந்தோருக்கு திரையிடப்பட்ட நிலையில், படத்தை 'Shakthi film factory' நிறுவனம் வாங்கியுள்ளதோடு, இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் பி.சக்திவேலன் கூறுகையில், "நடிகர் அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார். அவரது சமீபத்திய படமான "களத்தில் சந்திப்போம்" திரைப்படத்தின் வெற்றி திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தின் இறுதி பதிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யங்களை தந்தது. அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தன. படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது.

படத்தில் அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார். பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வாய்வார்த்தையாக உபயோகிப்பார்கள். இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். 2021 ஜூலை 21ம் திகதி  படத்தின் பெர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளோம்” என தெரிவித்துள்ளார் பி.சக்திவேலன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top