Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
துரித உணவுகள் தரும் ஆபத்துக்கள்....

SooriyanFM Gossip - துரித உணவுகள் தரும் ஆபத்துக்கள்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

338 Views
ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்தான உணவுகளை உண்ண வேண்டும். எனினும் தற்போதுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை விட, துரித உணவுகளை உண்ணும் பழக்கமே அதிகமாக உள்ளது. 

துரித உணவுகளை அதிகமாக விரும்பி உண்ணுவதால் இவர்களுக்கு உடலில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு, ஆரோக்கியம் சீர்குலைந்து விடுகின்றது.

குறிப்பாக துரித உணவுகளை உண்பதன் காரணமாக, உடலின் பலமும், பொலிவும் குறையும். அத்துடன் நம்மில் பலருக்கு வாத நோய்கள் உண்டாகும்.

உண்ட உணவு செரிக்காமல், மந்தமாக உடலில் தங்கி இருக்கும். சில நேரங்களில் வயிற்றை ஊசியால் குத்துவது போன்று காணப்படலாம்.

வயிற்று வலி, வயிற்று பொருமல், தலைவலி, தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும், இவற்றுக்கு `'ஆமம்'’ என்று பெயர்.

தகாத உணவை, அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும். பழைய காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றைக் கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். அல்லது இலகுவான அரிசி கஞ்சியைக் கொடுப்பார்கள்.

அஜீரண நிலையில் மருந்து கொடுக்க மாட்டார்கள், தானாக உபவாசம் இருந்து செரிக்க விடுவார்கள். பிறகு செரிப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பார்கள்.

இந்த செமிக்காத உணவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொறுத்து சிகிச்சை மாறும். குறைந்த நிலையில் இருந்தால் உபவாசம் இருப்பது நல்லது. நடுநிலையில் இருந்தால் உபவாசத்துடன் பக்குவ தன்மையுடைய மருந்து தரலாம். மிக அதிகமாக இருந்தால் தோஷங்களை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள்.

எப்போதும் உடலுக்கு பழக்கமான, ஒத்துக்கொள்ளக்கூடிய, சுத்தமான, நன்மை தரக்கூடிய உணவை மனதை ஒரு நிலைப்படுத்தி உண்ண வேண்டும்.

அவசரமாகவும் இல்லாமல், சோம்பலாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய அறுசுவை உணவை உண்ண வேண்டும்.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top