Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

SooriyanFM Gossip - WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

429 Views

உலகளவில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியான WhatsApp. புதிதுபுதிதாக பயனர்களைக் கவரும் Updateகளை கொடுத்து பயனர்களின் முதல் விருப்பத் தெரிவாக இருக்கின்றது. குறிப்பாக தனிநபர் தகவல் பாதுகாப்புக்காகவும், சமூக அக்கறையுடனும் பல்வேறு Updateகள் கொண்டுவரப்படுகின்றன.

IOS மற்றும் Android என்கின்ற இரண்டு வேறுபட்ட பயனாளர்களுக்கும் பல Updateகளை WhatsApp அறிமுகம் செய்த வண்ணமே உள்ளது. வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக இருந்த WhatsApp இல், Audio Call வசதி, Video Call வசதி, பணப் பரிமாற்றம் என அடுத்தடுத்த Updateகள் வந்தன.

இந்த நிலையில் WhatsApp Video Call Update ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது WhatsApp Group Video Call என்று அழைக்கப்பட்ட போதிலும் அதில் யாரும் இணையவில்லை என்றாலும், அதற்கான அழைப்பு Waiting இல் இருக்கும். அதன் பின்னர் Group Call இல் நாங்கள் எப்பொழுது  வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட Group இயக்கத்தில் இருக்க வேண்டும். இது கிட்டத்தட்ட Google Meet, Zoom போன்ற வசதிதான்.

முன்னதாக, IOS Group Call வசதியில் புதிய Update ஐ சோதனை முறையில் கொண்டு வந்தது WhatsApp.  2.21.140.11 வெர்ஷனில் பீட்டா அப்டேட்டாக இந்த Group Call Update வந்துள்ளது.

 ஒரு Waiting Call Option ஐ போலவே இது கொடுக்கப்பட்டுள்ளது. யாராவது உங்களுக்கு Group Call அழைப்புக் கொடுத்தால் உங்களது Screen இல் அது தெரியவரும். Screen இன் கீழ்ப் பகுதியில் Ring  Button உம் உள்ளது. குறிப்பிட்ட Group Call தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் நீங்கள் மறுபடியும் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் இணையலாம்.

அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் “Tap to join” மூலம் இணைந்து கொள்ளலாம். வேண்டுமானால் Video Call இனை தவிர்க்க ‘ignore’ Option உம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய Update ஆல் பயனாளர்களின் Privacyக்கு எந்தவொரு  பாதிப்பும்  இல்லை என்றும் WhatsApp தெளிவுபடுத்தியுள்ளது. இதுவும் பாதுகாப்பான End to End Encryption முறையில்தான் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

WhatsApp இன் இந்தப் புதிய Update ஆல் இனி Group  அழைப்புக்களை பயனர்கள் மிஸ் பண்ண மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த நேரத்திலும் Group Call இல் இணைந்துகொள்ள முடியும்  என்பதால் அதிக பயனர்களை உள்ளடக்கி இனி Group அழைப்புக்கள் இருக்கும் என்றும்,  Video அழைப்புக்களுக்கு மட்டுமின்றி Voice  Call வசதிக்கும் இந்த Update பொருந்தும் என்று WhatsApp தெரிவித்துள்ளது.

இந்த Update தொடர்பான தகவலை WhatsApp உரிமையாளர் Mark Zuckerberg தனது Facebook  பக்கத்தில் நேற்று  பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top