Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
APPLE தரும் பாதுகாப்பை தகர்த்ததா Pegasus Spyware...???

Sooriyan Gossip - APPLE தரும் பாதுகாப்பை தகர்த்ததா Pegasus Spyware...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
இஸ்ரேல் நாட்டில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற
Pegasus spyware எனப்படும் உளவு பார்க்கும் மென்பொருள் ஒன்று குறித்து ஊடகங்களில் அண்மையில் பரவலாக பேசப்பட்ட நிலையில், குறித்த Pegasus spyware ஆனது APPLE நிறுவனத்தின் I PHONE 11 மற்றும் 12 மொடல்களிலும் ஊடுருவியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.  


இருந்தும், பாவனையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது கைபேசிகளுக்குள் நுழைந்து விடும்
Pegasus spyware ஆனது I PHONE பாவனையாளர்கள் எத்தனை பேரை கண்காணிக்கும் வகையில் செயற்பட்டது என்பதனை சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை என APPLE நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட ஒரு சிலரை இலக்கு வைத்தே Pegasus spyware ஊடான செயற்பாட்டின் மூலம் கைபேசிகள் HACK செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குறித்த நிறுவனம் கூறுகின்றது.

இது குறித்து APPLE நிறுவன பாதுகாப்புப் பிரிவின் தலைவர் இவான் ஸ்டிக் கூறுகையில், “இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் சிக்கலானவை ஆகும். இவற்றை செயல்படுத்த அதிக செலவாகும். மேலும் இவை மிகவும் குறிப்பிடத்தக்க நபர்களை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. ஐ போன்களில் பாதுகாப்பு அம்சத்தை மேலும் பலப்படுத்துவதற்கான பணிகளில் APPLE ஈடுபட்டு வருகிறது.

உலகை, வாழ்வதற்கு ஏற்ற சிறந்த பகுதியாக மாற்ற நினைக்கும் செய்தியாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான சைபர் தாக்குதல்களை APPLE கடுமையாக கண்டிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பாதுகாப்பு விஷயத்தில் புதுமையை புகுத்துவதில் APPLE சிறந்து விளங்குகிறது. மேலும் உலகின் பல்வேறு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் உலகில் கிடைக்கும் நுகர்வோர் மொபைல் சாதனங்களில் ஐ போன் மிகவும் பாதுகாப்பானது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். எங்களது சாதனங்களின் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” எனத் தெரிவித்து வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top