Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
26
'FINGER PULSE OXIMETER' பற்றித் தெரிந்துகொள்வோமா......???

Sooriyan Gossip - 'FINGER PULSE OXIMETER' பற்றித் தெரிந்துகொள்வோமா......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

253 Views
OXYGEN எனப்படும் பிராணவாயு அளவு குறைவது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளில் ஒன்றாகக் கருதப்படுவதால், கொவிட் 19 தொற்று அதிகரித்துச் செல்லும் இந்தக் காலப்பகுதியில் உடலிலுள்ள பிராணவாயு அளவு குறித்த அவதானம் மருத்துவத் துறையைப் பொறுத்தவைக்கும்  பிரதானமாகப் பார்க்கப்படுகின்றது. 

இவ்வாறான பிராணவாயு அளவை அளவீடு செய்வதற்கு பல உபகரணங்கள் மருத்துவமனைகளில் உள்ள நிலையில், நாம் எமது உடலிலுள்ள பிராணவாயு அளவை வீட்டிலும் அளவீடு செய்யும் வகையில் 'FINGER PULSE OXIMETER' எனும் இலத்திரனியல் கையடக்க சாதனத்தின் பயன்பாடும் விற்பனையும் அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

இந்தச் சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது எனப் பார்ப்போமேயானால், கைகளிலுள்ள ஏதாவதொரு விரலை FINGER PULSE OXIMETER சாதனத்தில் பொருத்தி, அந்தச் சாதனத்தின் இயங்குநிலை பொத்தானை அழுத்திவிட்டு, குறித்த கருவியின் திரையைப் பார்க்கும்போது 30 வினாடிகளுக்குள் எமது இரத்தத்தில் கலந்திருக்கும் பிராணவாயுவின் அளவை இந்தக் கருவி அளவீடு செய்து காட்டும்.

95 முதல் 100 என்ற அளவீட்டைக் காட்டினால் எமது உடலிலுள்ள பிராணவாயு அளவானது சீராகக் காணப்படுகின்றது என்று தீர்மானிக்கலாம். அதேவேளை, 95 ற்கு குறைவான அளவைக் காட்டினால் உடல்நலத்தில் ஏதாவது சிக்கல் இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வர முடியும். அந்தவேளையில், கைவிரல்களை உள்ளங்கைக்குள் மடித்தும், விரித்தும் சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டு மீண்டும் FINGER PULSE OXIMETER ல் உடலிலுள்ள பிராணவாயுவை அளவீடு செய்யலாம்.

அப்போதும் பிராணவாயு 92-93 என்ற அளவீட்டை குறித்த சாதனத்தின் திரை காட்டுமாயின் வைத்தியர் ஒருவரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம். காரணம், உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும்போது, உடலின் பிராணவாயு அளவும் குறைந்துகொண்டே செல்லும் என்கின்றனர் மருத்துவத்துறை சார்ந்தோர். உடலின் பிராணவாயு அளவு குறைவடைவது குறித்து கவனமெடுக்காமல் இருந்துகொண்டால், மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும் என்றும் சுவாசப் பாதிப்புக்கு உள்ளானால் உயிராபத்து ஏற்படுவதற்கான நிலை அதிகமென்றும் தெரியவருகின்றது.

இதேவேளை, 'FINGER PULSE OXIMETER' எனும் இந்தக் கருவியின் மூலம், பிராணவாயு அளவை மட்டுமல்லாமல் எமது இதயத் துடிப்பையும் அறிந்து கொள்ள முடியும் என்பதுடன், உடல் ஆரோக்கியமான ஒருவரது இதய துடிப்பானது நிமிடத்திற்கு 60 முதல் 100 வரையான எண்ணிக்கையில் காணப்படும் என்றும் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top