Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
பாவித்த எண்ணையை மீண்டும் பாவிக்கலாமா?

Sooriyan FM Gossip - பாவித்த எண்ணையை மீண்டும் பாவிக்கலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

586 Views
பாவனைக்கு எடுக்கப்பட்ட எண்ணையை, மீண்டும் பயன்படுத்தும் போது, அது பல உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். 

எண்ணெய் மீண்டும் மீண்டும் வெப்பமடையும் போது அதிலிருக்கும் ஊட்டச்சத்து, இரசாயன பண்புகளையும் இழந்து விடும். எண்ணெய்யை மீண்டும் சூடாக்குவது நச்சுகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும்.

எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளை சாப்பிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக 48 சதவீதம் பேர் வாரத்தில் 6 முறை எண்ணெய்யில் தயாராகும் துரித உணவுகளை விரும்புவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது.

குறிப்பாக கர்ப்பிணிகள் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் கருவில் வளரும் குழந்தைக்கும் சென்றடையும்.

நட்ஸ், முழு தானியங்கள், மீன்கள் போன்ற இயற்கை மூலங்களில் இருந்து கிடைக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

ஆனால் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்துவதும், அதில் உள்ள நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்வதும் தாய்க்கும்- சேய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த கொழுப்பை அதிகம் நுகர்ந்தால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து விடும். அதனால் கர்ப்ப காலத்தில் வழக்கத்தை விட கூடுதல் எடை அதிகரிப்பு, இதய நோய் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே கர்ப்பிணிகள் எப்போதும் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடாக்கி பயன்படுத்தும் வழக்கத்தை பின்பற்றினால் வயிறு அல்லது தொண்டை பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படும்.

எனவே சுத்தமான எண்ணையை பாவிப்பதன் மூலமாக, உங்கள் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top