Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
புதிய போஸ்டரை வெளியிட்ட ‘கே.ஜி.எப்-2’ படக்குழு.

sooriyan fm Gossip - புதிய போஸ்டரை வெளியிட்ட ‘கே.ஜி.எப்-2’ படக்குழு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

422 Views
நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் ‘அதீரா’ கதாபாத்திரத்தின் தோற்றம் அடங்கிய போஸ்டரை கே.ஜி.எப்-2 படக்குழு வெளியிட்டுள்ளது.
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல
பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை இந்த மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, கொரோனா காரணமாக படத்தின் வெளியீட்டு திகதியை தள்ளிவைத்தது.

மேலும் இப்படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு சஞ்சய் தத்தின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனெனில் சஞ்சய் தத்தின் பிறந்தநாளான இன்று அதீரா கதாபாத்திரத்தின் தோற்றம் அடங்கிய போஸ்டரை வெளியிட்ட கே.ஜி.எப்-2 படக்குழு, அதில் வெளியீடு குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top