Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
மீண்டும் திருமணம் செய்துகொண்டார் நடிகர் பிரகாஸ்ராஜ்.

Sooriyan Gossip - மீண்டும் திருமணம் செய்துகொண்டார் நடிகர் பிரகாஸ்ராஜ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

437 Views
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகப் படங்கள் அனைத்திலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திவரும் நடிகர் பிரகாஸ்ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். 

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய "டூயட்" திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரமெடுத்த நடிகர் பிரகாஸ்ராஜ், குணசித்திர நடிகராக ரசிக்க வைப்பதுடன் வில்லனாகவும் திரையில் மிரட்டிவரும் நிலையில் ஹிந்தியிலும் தனது திறமையை வெளிப்படுத்திவருகின்றார்.

இந்தநிலையில், நடிகை லலிதா குமாரியை 1994ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகர் பிரகாஸ்ராஜ், பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டளவில் பரஸ்பர உடன்பாட்டுடன் தமது திருமண உறவை முடிவுக்கு கொண்டுவந்து சட்டபூர்வ விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

பின்னர், கடந்த 2010ம் ஆண்டு போனி வர்மா என்ற பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைந்த பிரகாஸ்ராஜ், தனது 11வது திருமண ஆண்டு நிறைவுநாளை மனைவியுடன் இணைந்து நேற்றையதினம் கொண்டாடினார். இந்தநிலையில், சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பகிர்ந்திருந்த அவர் மீண்டும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டார்.

அதில், "இன்றிரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். என் மகன் வேதாந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது" என குறிப்பிட்டுள்ளார் நடிகர் பிரகாஸ்ராஜ்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top