Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
இலங்கைக்கு தங்கம் | டோக்கியோ பராலிம்பிக்ஸ் 2020 - தினேஷ் பிரியன்த உலக சாதனை!

Sooriyan Gossip - இலங்கைக்கு தங்கம் | டோக்கியோ பராலிம்பிக்ஸ் 2020 - தினேஷ் பிரியன்த உலக சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

397 Views
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்ற பராலிம்பிக்ஸ் விளையாட்டு விழாவில் இலங்கையின் பிரதான பதக்க எதிர்பார்ப்பாக ஈட்டி எறிதல் வீரர் தினேஷ் பிரியன்த ஹேரத் விளங்கியிருந்தார்.

2016 ரியோ பாராலிம்பிக்கில் கையொன்றை இழந்த அல்லது கையின் மேல் பகுதி ஊனமுற்ற ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், இரண்டாவது முறையாக பதக்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்குபற்றியிருந்தார்.

இலங்கை சார்பாக பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட தினேஷ், இறுதியாக நடைபெற்ற 2017 உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தையும் 2018 ஆசிய பாரா விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் 2019 உலக பாரா மெய்வல்லுனர் சம்பயின்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

“கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகளால், இந்தமுறை பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அதற்காக நான் கடினமாக உழைத்தேன், தொடர்ந்து பயிற்சிகளையும் எடுத்தேன். அதேபோல, இம்முறை பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை எமது வீரர்களால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க முடியும்” என்று இலங்கை பாராலிம்பிக் அணியின் தலைவரான தினேஷ் பிரியன்த தெரிவித்திருந்தார்.

தினேஷ் அநுராதபுரம் மாவட்டம், இபலோகம – காகம என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். காகம தாதுசேன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். பாடசாலைக் காலத்தில் விளையாட்டில் ஈடுபடுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏனெனில், பாடசாலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு வயல் வேலைக்குச் செல்வார்.

சிறிய வயதில் இருந்தே சாதிக்க துடிக்கும் இவர் இப்போது இலங்கை நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

டோக்கியோவில் இடம் பெற்று வருகின்ற பராலிம்பிக்ஸ் போட்டிகளில் தினேஷ் பிரியன்த சாதனை படைத்தது தங்கம் வென்றுள்ளார்.
இதற்கமைய,F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடதக்கது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top