Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
வைகைப்புயல்' வடிவேலுக்கு மீண்டும் சிக்கல்.

Sooriyan Gossip - வைகைப்புயல்' வடிவேலுக்கு மீண்டும் சிக்கல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

394 Views
திரைத்துறைக்குள் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சில வருடங்கள் திரையில் தலை காட்டாமலிருந்த 'வைகைப்புயல்' வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அந்தப் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த வடிவேலுவுக்கு, 'லைகா' நிறுவனம் மறுவாழ்வு கொடுத்திருக்கின்ற நிலையில், தமது தயாரிப்பில் தொடர்ந்து பல நடிப்பதற்கான வாய்ப்பையும் வடிவேலுவுக்கு வழங்கியிருக்கின்றது 'லைகா'.

இது இப்படியிருக்க, மீள் திரைப்பிரவேசம் செய்யும் வடிவேலுவின் முதல் படமாக "நாய் சேகர்" என்ற பெயரில் படமொன்று உருவாகவிருக்கும் நிலையில், அந்தப் பெயருக்கு இப்போது சிக்கல் எழுந்துள்ளது.

நகைச்சுவை நடிகர் சதீஸ் மற்றும் 'குக் வித் கோமாளி' மூலம் பெயர்பெற்ற நடிகை பவித்ரா இணைந்து நடிக்கும் ஒரு படத்தை கிஷோர் ராஜ்குமார் என்ற இயக்குனர் படமாக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு "நாய் சேகர்" என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வடிவேலு நடிக்கவிருக்கும் படத்திற்கும் "நாய் சேகர்" என்ற பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இரு தரப்பில் யார் குறித்த தலைப்பை பயன்படுத்துவது என்ற குழப்பம் எழுந்துள்ளது.

இது குறித்து நடிகர் வடிவேலு இயக்குனர் கிஷோர் ராஜ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தமது படத்தின் கதைப்படி "நாய் சேகர்" என்ற தலைப்பு மிக முக்கியம். காரணம், படத்தில் ஒரு நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் இருப்பதால் இந்தப் பெயர் மிக மிக அவசியம் என்று அடம்பிடித்திருக்கின்றார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார்.

இருந்தும், இந்தப் பிரச்சனை ஒரு சுமுகமான தீர்வுக்கு வரும் என்று வடிவேலு தரப்பு நம்பிக்கை தெரிவித்திருக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top