Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
தினமும் கூந்தலை கழுவுவதால் வரும் ஆபத்து

sooriyanfm gossip - தினமும் கூந்தலை கழுவுவதால் வரும் ஆபத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

570 Views

தினமும் கூந்தலை கழுவுவது சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று பலர் கருதலாம். 

ஆனால் பெண்களை பொறுத்தவரை அது ஏற்புடையதல்ல.

தினமும் தலைமுடியை கழுவினால் பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஒரு ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது.

சருமத்தைப்போலவே தலை முடியும் மென்மையான உணர் திறன் கொண்டது.

அதனை அளவுக்கு அதிகமாக கழுவினால் அதன் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.

சுற்றுச்சூழல் மாசு, தூசு போன்றவை கூந்தலை நேரடியாக பாதிக்கும். உலர்தன்மை கொண்டதாகவும் மாற்றிவிடும்.

தினமும் தலைமுடியை கழுவுவது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதி, பெண்கள் பலரும் தலைமுடியை கழுவும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

அத்துடன் ஷாம்பு பயன்படுத்துவது உச்சந்தலை சுகாதாரத்தை பராமரிக்க ஏதுவாக அமைந்திருப்பதாக கருதுகிறார்கள்.


ஆனால் தினமும் ஷாம்பு பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

தினமும் கூந்தலை கழுவுவது சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கருதலாம்.

ஆனால் பெண்களை பொறுத்தவரை அது ஏற்புடையதல்ல அவை கூந்தலுக்கு கெடுதலே நேரும்.

தலைமுடியை அடிக்கடி கழுவுவது முடியின் இயற்கையான அமைப்பையும், பளபளப்பையும் பாதிக்கும்.

முடியும் பொலிவிழந்து மந்தமாகிவிடும்.

குறிப்பாக உலர்ந்த கூந்தல் முடி கொண்டவர்கள் தினமும் தலைமுடியை கழுவ தேவையில்லை.

அவ்வாறு செய்வது தலைமுடி வறண்டு, வெளிர்தன்மை அடைந்து சேதமடைய வாய்ப்பிருக்கிறது.

அத்துடன் தலைமுடியில் சிக்கலும் ஏற்படக்கூடும்.

அதனை அகற்றுவதற்கு கடினமாக இருக்கும்.

தலை முடியை சீப்பு கொண்டு சீவும்போது முடி உதிர்வு பிரச்சினையும் உண்டாகும்.

ஈரமான தலைமுடியில் சீப்பு பயன்படுத்தக்கூடாது.

ஏனெனில் கூந்தல் முடி சேதம் அடைவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

எந்த அளவுக்கு அதிகமாக தலைமுடியை கழுவுகிறீர்களோ, அந்தளவுக்கு முடி உடைந்து சேதமடையும்.

எனவே தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு அடிக்கடி கழுவுவதை தவிருங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top