Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
'ஒருபோதும் கிடைக்காத கெளரவம்' - மனம் நெகிழும் KGF வில்லன்.

Sooriyan Gossip - 'ஒருபோதும் கிடைக்காத கெளரவம்' - மனம் நெகிழும் KGF வில்லன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

259 Views
கன்னடத்தில் வெளியாகி மொழிகடந்த ஒட்டுமொத்த திரைத்துறை ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற படமான KGF திரைப்படத்தில் வில்லனாக நடித்து புகழடைந்தவர் நடிகர் கருடா ராம்.

இவர் தற்போது, நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் "AV 33" திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பதால் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடம் நேரடி வரவேற்பைப் பெறவுள்ளார். இந்தநிலையில், நடிகர் கருடா ராம் நடித்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்ததனால் அவர் கர்நாடக மாநிலத்திற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.

இந்தநிலையில், அவருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிய இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் உட்பட்ட "AV 33" படக்குழுவினர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நடிகர் கருடா ராம் மனம் மகிழும் வகையில் பெரும் கொண்டாட்டத்துடன் கெளரவித்திருந்தனர்.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத நடிகர் கருடா ராம், மனம் நெகிழ்ந்து போனதுடன், "KGF" படத்திற்குப் பின்னர் நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஆனால், இதுபோன்று எந்தவொரு படக்குழுவினரும் இந்த அளவிற்கு என்னை கெளரவப்படுத்தவில்லை. இந்தப் படத்தில் நடித்தமையின் மூலம் எனது மனதிற்கு மிக நெருக்கமான படமாக இந்தப் படம் மாறிப்போயுள்ளது. படத்தின் இயக்குனர் ஹரி மற்றும் இந்தப் படக்குழுவினரை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top