Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட ரஜினியின் "அண்ணாத்த".

Sooriyan Gossip - சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட ரஜினியின் "அண்ணாத்த".Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

190 Views
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் திரை காணவிருக்கும் "அண்ணாத்த" திரைப்படத்திற்கு சிக்கல் ஒன்று எழுந்துள்ள நிலையில், படக்குழு தொடக்கம் ரசிகர்கள் வரைக்கும் கவலையில் உள்ளனர்.  

"அண்ணாத்த" திரைப்படம் இவ்வாறு சிக்கலுக்குள் சிக்கக் காரணம் ரஜினியின் தீவிர ரசிகர்கள் சிலரின் முட்டாள்தனமான செயற்பாடு தான் என்கின்றது கோடம்பாக்கம். அத்துடன், இந்தத் திரைப்படம் குறித்து பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை தாக்கல் செய்தவர் ஒரு வழக்கறிஞர் தான் என்றும் தெரிய வருகின்றது.

இது குறித்து வழக்குத் தொடர்ந்தவர் கூறுகையில், "நான் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். இந்த மனுவில் யாதொரு உள்நோக்கமும், சுயநலமும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன். கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் "அண்ணாத்த" படம் பேனர் முன்பு நடுரோட்டில் கொடூரமாக ஒரு ஆட்டை பட்டாக்கத்தி பாவித்து வெட்டி, பேனருக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

பொது இடத்தில், சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமாக அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக ஆர்வலர்களால் பொதுமக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது, இன்றைய தேதிவரை இச்செயலை எதிர்த்து ஒரு கண்டனம், எதிர்ப்பு அறிக்கையோ, விளக்கமோ ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை. இச்செயலை ஆதரிப்பது போலவே உள்ளார். இது பொதுமக்களுக்கு அச்சத்தையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

மேலும் மிருகவதையும் அடங்கும், கோயில்களில் ஆடு பலி இடுவதே ஓரமாக ஒதுக்குப்புறமாக செய்யும் நாடு, மேலும் கசாப்பு கடையில் கூட மறைவாகதான் ஆட்டை அறுப்பார்கள், ஆனால் இப்படி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூடியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு கொடூரமான செயலை செய்த மேற்படி நபர்களை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இச்செயலைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன்" என காவல்துறையில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top