Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
டுவிட்டரில் கலக்கும் பொன்னியின் செல்வன் குழுவினர்

sooriyanFM Gossip - டுவிட்டரில் கலக்கும் பொன்னியின் செல்வன் குழுவினர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

415 Views
 
 மிகப்பெரிய  நாவலான பொன்னியின் செல்வன்  நாவல் பல மேடை நாடகங்களாக முன்னெடுக்கப்பட்டது. எனினும் இந்த நாவலை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாக்குவது என்பது திரைக் கலைஞர்களின் கண்முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகவும், அதே சமயம் இந்த நாவலை படமாக்குவது என்பது கனவாகவும் இருந்து வந்தது.

தற்போது பிரபல இந்திய - தமிழ் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதற்கு தயாரானார். அதன்படி படப்பிடிப்புகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.இதனிடையே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன.

இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.மேலும் நடிகர் ஜெயம் ரவி தமது காட்சிகளை அண்மையில்தான் முடித்ததாக அறிவித்திருந்தார்.

அப்போது அதற்கு பதில் கொடுத்த கார்த்தி, தமது ட்விட்டரில், “இளவரசே நீங்கள் செய்ய வேண்டிய பணி இன்னும் முடியவில்லை” என குறிப்பிட்டு அசர வைத்துள்ளார். இதிலிருந்து இளவரசராக ஜெயம் ரவி மற்றும் வந்தியத் தேவனாக கார்த்தி நடிக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

இது இப்படியே நின்று விடாமல் படப்பிடிப்பை முடித்த கார்த்தி, திரிஷாவை குறிப்பிட்டு, "இளவரசி நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது" என்றும் ஜெயம் ரவியை குறிப்பிட்டு "இளவரசே என் பணியும் முடிந்தது" என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பரபரப்பான ட்வீட்டுக்கு தற்போது பதில் அளித்திருக்கும் ஜெயம் ரவி, “வந்தியத்தேவரே.. பணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே!” என்று பதிவிட்டிருக்கிறார்.இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top