Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
பொதுச் சேவையால் சிக்கலுக்குள் மாட்டிய நிஜ ஹீரோ.

Sooriyan Gossip - பொதுச் சேவையால் சிக்கலுக்குள் மாட்டிய நிஜ ஹீரோ.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
திரைப்படங்களில் பல நடிகர்கள் 'ஹீரோ'வாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தாலும், நிஜ வாழ்க்கையில் மக்கள் மத்தியில் 'ஹீரோ'வாக ஜொலிக்கத் தவறிவிடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில், நிஜத்தில் மக்கள் கதாநாயகனாகக் கொண்டாடும் நடிகர் சோனு சூட் தனது பொதுச் சேவையால் சிக்கலுக்குள் சிக்கியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா தொற்றுக்கு முகம் கொடுக்க முடியாமல் திண்டாடிய ஏழை எளிய மக்களுக்கு தனது சொந்தக் செலவில் பல வகையிலும் உதவிகளைப் புரிந்து 'நிஜ ஹீரோ'வான நடிகர் சோனு சூட் தற்போது வருமான வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கித் தவிக்கின்றார்.

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், மும்பையிலுள்ள நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் 3 நாட்களாகத் தொடர்ந்து சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டது வருமான வரித்துறை. இந்த சோதனை நடவடிக்கையில், நடிகர் சோனு சூட் நடத்திச் செல்லும் சொந்த நிதி நிறுவனம் மூலம் வந்த வருமானப் பணத்தொகையை, 'பொலிவூட்' திரைப்படங்களில் தான் நடித்ததன் மூலம் ஈட்டிக் கொண்டதாக பொய்யான கணக்கு காட்டி அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது வருமானத்துறை.

அத்துடன், 2 கோடி ரூபா நன்கொடை பெற்றதில் விதிமீறல் இடம்பெற்றதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளை, ஜூலை மாதம் 2021ம் ஆண்டு நடிகர் சோனு சூட் ஆரம்பித்த இலாப நோக்கற்ற தொண்டு அறக்கட்டளை மூலம்
நன்கொடையாக சேகரிக்கப்பட்ட 18 கோடி ரூபாவுக்கு அதிகமான பணத்தொகையில் ஏப்ரல் மாதம் 2021ம் ஆண்டு வரை 1.9 கோடி ரூபா நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு அறிக்கை தெரிவிக்கின்ற நிலையில், 17 கோடி ரூபா பணம் லாப நோக்கற்ற வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் கூறுகின்றது வருமான வரித்துறை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top