Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் அதிரடியாகக் கைது.

Sooriyan Gossip - நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் அதிரடியாகக் கைது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

277 Views
'கார்டிலியா' என்ற சொகுசு கப்பலில் மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலா ஒன்றை 6 பேர் ஏற்பாடு செய்த நிலையில் இணையவழி மூலம் சுற்றுலா பயண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்தச் சுற்றுலாவானது திட்டமிட்டபடி நேற்று மதியம் மும்பை துறைமுகத்தில் இருந்து சுற்றுலா பயணத்தை தொடங்கியதுடன், அதில் கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மொடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினர் பயணித்தனர்.

இந்த நிலையில், குறித்த சொகுசு கப்பல் சுற்றுலாவில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவலையடுத்து, போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் தனிப்படையை உருவாக்கினார்.

இந்த அதிரடிக் கைது நடவடிக்கைக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 20 அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல மாறுவேடத்தில் அந்த கப்பலில் சென்றதுடன், அவர்கள் கப்பலில் உள்ள பயணிகளை கண்காணித்தபோது, 8 இளைஞர்கள் போதைப்பொருட்களை தொழில் அதிபர்களின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு வழங்குவதைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து அந்த 8 பேரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து பெருந்தொகையான கொக்கெய்ன், கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

குறித்த அதிரடி நடவடிக்கையின்போது, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றவாளிகளை மட்டும் பிடித்து தனிமைப்படுத்தியதுடன், போதைப்பொருளை பயன்படுத்தியவர்கள் மற்றும் விநியோகம் செய்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, 'பொலிவூட்' சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் குறித்த குழுவில் இருந்தமை தெரியவந்துள்ளது.


இந்தக் கைது நடவடிக்கையில் மாட்டுப்பட்ட 13 பேரை மட்டும் கப்பலிலிருந்து வெளியேற்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களை மும்பைக்கு அழைத்து வந்ததுடன், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களது குருதி மாதிரிகள் ஆய்வுகூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் தெரிவித்துள்ளதோடு, ஆரியனின் கையடக்கத் தொலைபேசியும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆரியன் யார் யாருடன் கைத்தொலைபேசியில் தொடர்பில் இருந்தார்...? அவருக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஏதேனுமொரு வகையில் தொடர்புகள் உள்ளனவா..? போன்ற சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top