Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
அரிதாரம் பூசும் ஆசையில் 'கோமாளி' இயக்குனர்.

Sooriyan Gossip - அரிதாரம் பூசும் ஆசையில் 'கோமாளி' இயக்குனர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views
"கோமாளி" திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகிலும் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடம்பிடித்துக்கொண்ட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அரிதாரம் பூசும் ஆசையுடன் களமிறங்கியுள்ளார். 

ஜெயம் ரவி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான "கோமாளி" திரைப்படத்தை உருவாக்கி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றதனூடாக, எதிர்காலத்தில் சிறந்ததொரு இயக்குனராக வலம்வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தனது அடுத்த படைப்பை யாரை கதாநாயகனாக்கி திரைக்கு கொண்டுவரப் போகின்றார் என்ற கேள்வி இருந்து வந்தது.

எப்போது இவரது புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த திரைப்படத்தைத் தயாரிக்கப்போவது "பிகில்" படத்தை உருவாக்கிய AGS நிறுவனம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலமாக இயக்குனராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தன்னை ரசிகர்களிடம் அறிமுகம் செய்யும் ஆசையில் இறங்கியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

இந்தநிலையில், இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகின்றாரே... என்னவாகப்போகின்றாரோ..? என்று அங்கலாய்க்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top