Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான அறிகுறிகள்

Sooriyan fm Gossip - நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான அறிகுறிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

536 Views
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் தான் விரைவில் பல நோய்களின்  பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சளி மற்றும் காய்ச்சல் மீண்டும் மீண்டும் வருவது, குளிர் காலங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவது, ஒவ்வாமை, ஆஸ்துமா பாதிப்பை எதிர்கொள்வது, அடிக்கடி நோய் தொற்றுகளுக்கு ஆளாவது இவை பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மை கொண்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். 

குடல் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் 70 சதவீதத்தை மேம்படுத்தி விடலாம். உணவின் ஒரு அங்கமாக புரோ பயோடிக் உணவுகளை சேர்த்துக் கொள்வதும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

இன்றைய வாழ்க்கை முறையில் சமச்சீரற்ற உணவு, தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம், காற்று மாசுபாடு மற்றும் முதுமை இவை அனைத்தும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்குகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை ஒருசில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மன அழுத்தம்: இது நீடித்துக் கொண்டிருந்தால் தூக்க சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிவிடும். இவை அனைத்தும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகின்றன. நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் தன்மையையும் குறைக்கின்றன.

காது, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் அடிக்கடி நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய அபாயங்களை கையாளுவதற்கு ஏற்ப உடலானது இயற்கையான எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வேண்டும்.

பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு அடிக்கடி நோய்களை ஏற்படுத்தும். நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வரும் செயல்முறையையும் தாமதப்படுத்தும்.

போதுமான அளவு தூங்கினாலும் கூட பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மையை கொண்டிருந்தால் ஒருவித மந்த நிலையை உணரக்கூடும். கடினமான வேலைகளை செய்யாவிட்டாலும் கூட உடல் சோர்வுடன் காணப்படும். உடல் ஆற்றல் குறைவாக இருப்பதையும் உணரலாம்.

எனவே எந்நேரமும் சத்தான பழங்களையும், ஆரோக்கியமான உணவுகளையும் உண்பது கட்டாயமானதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top