Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
பாராட்டு மழையில் DOCTOR படக்குழு.

Sooriyan Gossip - பாராட்டு மழையில் DOCTOR படக்குழு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

321 Views
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியிருக்கும் "டாக்டர்" திரைப்படத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் தொடக்கம் ரசிகர்கள் வரை தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், "DOCTOR" திரைப்படத்தின் குழுவை தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பாராட்டுகையில், "இந்த கொரோனா காலகட்டத்தில் DOCTOR எங்களுக்கு சிறந்த சிரிப்பு மருந்தை கொடுத்திருக்கிறார். அனைவரையும் மகிழ்வித்த இயக்குனர் நெல்சனுக்கு பாராட்டுக்கள். குடும்பங்கள் கொண்டாடும்படியான பொழுதுபோக்கு படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. திரையரங்க அனுபவம் மீண்டும் திரும்பி உள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, ஷங்கரின் மகள் அதிதி வெளியிட்டுள்ள பதிவில், “DOCTOR சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். அற்புதமாக இருந்தது” என வாழ்த்தியிருக்க, அதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், மிக விரைவில் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ள அதிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து, 'கலக்குங்க' என வாழ்த்து கூறியுள்ளார்.

இது இப்படியிருக்க, வாழ்த்துப் பதிவிட்டுள்ள இயக்குனர் சுசீந்திரன், “குடும்பத்துடன் டாக்டர் படம் பார்த்தேன். சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

"ஓ மை கடவுளே" திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து DOCTOR பற்றிக் கூறுகையில், “உருண்டு உருண்டு சிரிச்சேன். கண்ணில் தண்ணீர் வர வர சிரிச்சேன். சிவகார்த்திகேயன் வசீகரிக்கிறார். இயக்குனர் நெல்சன் சிறந்த எழுத்தாளர். அனிருத் படத்தின் முதுகெலும்பு. விஜய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு அற்புதம். யோகிபாபுவும், டோனியும் சிரிப்பு மருத்துவர்கள்” என பாராட்டியிருக்கின்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top