Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
நடிகர் நெடுமுடி வேணு இன்று காலமானார்

sooriyan Gossip - நடிகர் நெடுமுடி வேணு இன்று காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

394 Views

பிரபல தமிழ் மற்றும்  மலையாள நடிகர் நெடுமுடி வேணு இன்று காலமானார்.

தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம் உள்ளிட்ட பல படங்களில் அவர் சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் 1978 ஆம் ஆண்டு சினிமாத்துறைக்குள் அறிமுகமானார்

அத்துடன் பல்வேறு நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர்.

இவர் தமிழில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ ஆபிசராக நடித்திருப்பார்.

இதேவேளை இயக்குநர் ஷங்கரின் ஆஸ்தான நடிகராக வலம் வந்த நெடுமுடி வேணு இந்தியன் -2 படத்திலும் நடித்து வந்திருந்தார்.

மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

73 வயதாகும் நெடுமுடி வேணு, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று பின் குணமாகினார்.

இந்த நிலையில் நேற்று உடல்நலம் சரியில்லாததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top