Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
மருத்துவமும், மகத்துவமும் மிக்க துளசிச் செடி

Sooriyan fm Gossip - மருத்துவமும், மகத்துவமும் மிக்க துளசிச் செடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

275 Views
இயற்கை தந்த படைப்புக்களில் துளசி ஒரு அற்புதமான மூலிகை மருந்து ஆகும். துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. 

ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் துளசிச் செடி இருந்தது. துளசியானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சித்தர்களாலும், முனிவர்களாலும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த துளசியின் மருத்துவ குணங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

பத்து துளசி இலையுடன் சிறிதளவு மிளகு சேர்த்து நன்றாக இடித்து இரண்டு குவளை தண்ணீரில் கலந்து அதனை அரை குவளை தண்ணீராகும் வரை நன்றாக வேக வைத்து மிதமான சூட்டில் இந்த பானத்தை அருந்த வேண்டும்.

அதன் பின்னர் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் அருந்த வேண்டும். இது மலேரியா காய்ச்சலுக்கான சிறந்த நிவாரணியாகும். மேலும் இரவில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அவற்றில் சிறிதளவு துளசி இலைகளை போட்டு மூடி வைக்கவும்.

இந்த தண்ணீரை மறுநாள் காலை வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு தொடர்சியாக செய்துவர படிப்படியாக சிறுநீரக கற்கள் கரைய ஆரம்பிக்கும். கூடவே இரத்தத்திலுள்ள தேவையற்ற வேதிப்பொருட்கள் விஷநீர் போன்றவை சிறுநீருடன் வெளியேறியும் விடுகிறது.

அதேபோல துளசியுடன் புதினா இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து சிறிதளவு கிராம்பு பொடியும் சேர்த்து நன்றாக கலந்து பல் துலக்கி வர பற்களில் உள்ள ஈறுகள் நீங்குவதுடன் வாய் துர்நாற்றம் வீசாது எப்போதும் இருக்கும்.

மேலும் துளசி சாறு ஒரு மில்லியும், தேன் ஐந்து மில்லியும் சேர்த்து சிறிதளவு வெந்நீருடன் தினமும் காலை மாலை என தொடர்ந்து அருந்திவர இதயமும் பலம் பெறும் . இவ்வாறு பல மருத்துவ குணங்கள் கொண்ட துளசியை பயன்படுத்தி பயன்பெறுவோம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top