Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
'தாவணி போட்ட தீபாவளி' மீண்டும் திரைக்கு.....!!!

sooriyan Gossip - 'தாவணி போட்ட தீபாவளி' மீண்டும் திரைக்கு.....!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

117 Views
நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் அடித்த "ரன்" திரைப்படத்தின் மூலம் இயக்குனர் லிங்குசாமியினால் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடம் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

அதன் பின்னர் விஷால் நடிப்பில் வெளிவந்த "சண்டக்கோழி" திரைப்படமானது மீரா ஜாஸ்மினுக்கு நல்லதொரு திருப்பத்தைக் கொடுத்திருந்த நிலையில் தென்னிந்தியத் திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகையாக வலம் வந்திருந்தார்.

இந்தநிலையில், 2014ம் ஆண்டு அனில் ஜோன் டைட்டஸ் என்பவரைக் கரம்பிடித்து இல்லற வாழ்வில் இணைந்ததன் பின்னர், 7 வருடங்களாக நடிப்பிற்கு விடுமுறை கொடுத்திருந்ததுடன், உடல் பருமன் அதிகரித்தும் காணப்பட்டார்.

இருந்தும், 'ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது' என்ற முதுமொழிக்கு ஏற்ப 'மல்லுவூட்' எனப்படும் மலையாளத் திரையுலகில் மீள் திரைப்பிரவேசம் செய்கின்றார் மீரா ஜாஸ்மின். மலையாள பிரபல இயக்குனர் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படமொன்றிலேயே ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இதற்காக 20kg வரை உடல் எடையைக் குறைத்திருப்பதாகவும் மலையாளத் திரைவட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top