Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
சத்துமாவிலுள்ள பயன்களும், தயாரிக்கும் முறையும்...

SooriyanFM Gossip - சத்துமாவிலுள்ள பயன்களும், தயாரிக்கும் முறையும்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

457 Views
நவதானியங்கள் அடங்கிய சத்து மாவை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம். ஆரோக்கியமான சத்து மாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்வது  உடலுக்கு ஆரோக்கியமாகுமானதாகும். 

அதே போல் குழந்தைகளுக்கான உணவில் பெற்றோர் அதிக கவனம் எடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கென பதப்படுத்தப்பட்ட சத்து மாவுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட ,வீட்டில் தயாரித்து கொடுப்பதே சிறந்தது ஆகும்.

அதனை எவ்வாறு செய்வது என்பது பற்றி இப்போது பார்ப்போம். முதலில் சத்துமா தயாரிக்க தேவையான பொருட்களில் கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, சோளம் போன்றவற்றை இரவில் தூங்கும் முன் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை நன்கு கழுவி ஒரு துணியில் மூட்டை கட்டி வைக்க வேண்டும்.

பின்னர் அதனை ஒருநாள் முழுவதும் காய வைத்து அதில் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். பிறகு மறுநாள் அந்த மூட்டையை பார்த்தால் அதில் முளைக் கட்டியிருக்கும்.

பின்னர் அதனை வெயிலில் நன்கு உலர வைக்க வேண்டும். மறுநாள் காய வைத்த மேற்சொன்ன அனைத்தையும் நன்றாக வறுத்து அரைத்து அதனை காற்றுப் புகாத டப்பா ஒன்றில் போட்டு வைக்க வேண்டும்.

இவ்வாறு தயாரிக்கும் சத்துமா மூலம் உடலுக்கு தேவையான சத்துக்களும், சக்தியும் கிடைக்கிறது. இதில் காபோஹைதரேட் மற்றும் கொழுப்பு என்பன குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது உடல் எடையை குறைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top