Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
மாநாடு’ படத்தின் ரிலீஸ் திகதியில் மாற்றம்.

sooriyan Gossip - மாநாடு’ படத்தின் ரிலீஸ் திகதியில் மாற்றம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

353 Views

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 4-ஆம்  திகதி  தீபாவளி பண்டிகையன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அன்றைய தினம் ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் ரிலீசாக உள்ளது.

இதனால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பாக்கப்பட்டுள்ளது .

அதனால் தற்போது மாநாடு படம் தீபாவளி தினத்தில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்... நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறேன்.

‘மாநாடு’ முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டு விட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல... ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம்.

அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை.

அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.

நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது.

அதன்மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது.

வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான்.

ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு குறித்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 25-ஆம் திகதி படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநாடு திரைப்படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது ஆனால் அன்று வெளியாகும் படங்களுக்கு வாழ்த்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top