Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
ராமராஜன் உடல்நல வதந்தி குறித்து அவர் தரப்பு விளக்கம்

sooriyan fm gossip - ராமராஜன் உடல்நல வதந்தி குறித்து அவர் தரப்பு விளக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

869 Views

   ராமராஜன் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு அவர் தரப்பிலிருந்து மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.1985 ஆம் ஆண்டு ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் ராமராஜன். 
 இதனைத் தொடர்ந்து 1986ஆம் ஆண்டு வெளியான ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘கரகாட்டக்காரன்’ என தொடர் வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தார்.

90களுக்குப் பிறகு படங்களில் நடிப்பது படிப்படியாகக் குறைந்து தற்போது முற்றிலுமாக சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார்.

 அவ்வப்போது ராமராஜன் உடல்நலம் குறித்து இணையத்தில் வதந்திகள் பரவுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களாக ராமராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது.

 தற்போது ராமராஜன் தரப்பிலிருந்து இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ''வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த ‘கரகாட்டக்காரன்’ படம் மட்டுமல்லாமல் பல, நூறு நாட்கள் படங்களைத் தந்து தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமராஜனை பற்றி தற்சமயம் தவறான வதந்தியைப் பரப்பிவருகிறார்கள். ராமராஜன் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.

 இரண்டு திரைப்படங்களுக்கு தனது கதையைத் தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை. ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளனர் .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top