ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு, தண்டனை குறைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளர் ஆகியோருக்கு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த தண்டனை குறைப்பில் தவறில்லை என்று தெரிவித்து, உச்ச நீதிமன்றம்அந்த அனுவை ரத்து செய்துள்ளது.
எனினும், தமிழக அரசாங்கத்தினால் அவர்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக மத்திய அரசாங்கம் தொடுத்திருந்த வழக்க தொடர்ந்து விசாரணையில் இருக்கிறது.