Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
இளமைப் பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கான ஆரோக்கிய வழிமுறைகள்!

SooriyanFM Gossip - இளமைப் பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கான ஆரோக்கிய வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

472 Views
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உள்ளம் புத்துணர்வோடு இருந்தால்தான் முகமும் பொலிவு பெற்று புறத்தோற்றத்தில் அதன் அழகு வெளிப்படும். வயது அதிகரித்தாலும் இளமைப் பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு அகம், புறம் இரண்டையும் பேணி வந்தால் போதும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

அழகு என்றதும் நிறைய அதிகமானோர் முகப்பொலிவுக்கும், நிறத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக அழகுசாதனப் பொருட்களை மட்டுமே சார்ந்திருப்பார்கள். அப்படி இருக்காமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள், போன்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அவையும் அழகை மெருகேற்றும் தன்மை கொண்டவை. தண்ணீரும் போதுமான அளவு பருக வேண்டும்.
 
 உடல் எடையில் கவனம் :
 ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது. உடல் எடையைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தேவையற்ற துரித உணவுகளை தவிர்ப்பதுடன், சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் வேண்டும்.
 
மன நலம் காப்போம் :
 தேவையற்ற மன அழுத்தமும் சருமப் பொலிவுக்கு எதிரியாக மாறிவிடும். மனதில் ஏதேனும் குழப்பங்கள் குடி கொண்டிருந்தால் அதன் தாக்கம் முகத்திலும் எதிரொலிக்கும். பொலிவும் மங்கிவிடும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதுடன், வாரம் ஒருமுறை சிறிதளவு எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வரலாம். தினமும் தியானம் செய்து வருவதும் மனதை புத்துணர்வாக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் வெளித்தோற்றமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
* உருளைக்கிழங்கின் சாறினை எடுத்து இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி,15 நிமிடம் உலரவிட்டு, பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் இரவில் செய்து வருவதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதுடன் ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும்.
 
* தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி, குளித்து வந்தால் நாளடைவில் முகம் பொலிவு பெறும்.

* கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பூசி வர முகச் சுருக்கம் நீங்குவதுடன் முகம் பொலிவுறும்.
 
* அதிக அளவில் மேக்கப் செய்து கொள்ளாமல், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம் மூலம் இளம் வயதில் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தவிர்க்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top