Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
முக அழகிற்கு கேடாகும் முடி உதிர்வு பிரச்சினைக்கு இதோ தீர்வு

Sooriyan fm Gossip - முக அழகிற்கு கேடாகும் முடி உதிர்வு பிரச்சினைக்கு இதோ தீர்வுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

478 Views
ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் எதிர்நோக்கும்  ஓர் பொதுவான பிரச்சினை முடி உதிர்தல் ஆகும்.
இதற்கு தீர்வாக என்ன தான் பல செயற்கை முறைகள் நம் மத்தியில்  வந்தாலும் அவை எல்லாம் நல்ல பலனளிக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

அவற்றையெல்லாம் பயன்படுத்தும் போது  எதிர்விளைவுகள் தான் ஏற்படுகின்றன. சரி இதனை சரிசெய்வதற்கு என செய்யலாம் என்று  இப்போது பார்ப்போம்.

நம் வீட்டிலேயே இயற்கையான கூந்தல் பராமரிப்பு எண்ணையை தயார் செய்து  பயன்படுத்தினாலே போதும். முடி உதிர்வு பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம். முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பித்து விடும். இதற்கு கற்றாழையிலுள்ள தோல் பகுதியை நீக்கி விட்டு அதிலுள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ளவும். அதனை சுத்தமான நீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதனால் கற்றாழையிலுள்ள ஒரு வகையான அரிப்புத் தன்மை நீங்கி விடும்.

பின்பு இந்த கற்றாழையை மிக்சியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு கப் அளவிற்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை அடுப்பில் மிதமான அளவிற்கு சூடேற்றிகொள்ளவும். அதனுள் ஒரு கப் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேறியதும் அதனுள் கற்றாழை ஜெல்லை சேர்த்து கிளறி விடவேண்டும்.

பின்பு ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகம்   மற்றும்  வெந்தயத்தினையும் இட்டுக் கொள்ளவும். கருஞ்சீரகமும், வெந்தயமும் இயற்கையாகவே முடி வளர்சிக்கு பெரிதும் உதவும்  பொருட்களாகும் .
இப்போது தயாராகும் எண்ணெயானது முடி உதிர்வு பிரச்சினைக்கு மட்டுமின்றி பொடுகு பிரச்சினைக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.

இந்த எண்ணெயை ஒரு மாதம் வரையாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள். கூடவே  தலைக்கு குளிர்மையாவும் இருக்கும். மேலும் இளநரை ஏற்படாமலும் இருக்கும்.
எனவே மேற்சொன்ன முறைகளை பின்பற்றி முடி உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அடர்தியானதும், ஆரோக்கியம் மிக்கதுமான கூந்தலை  பேணி பராமரிப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top