Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
இரத்து செய்ய படுகிறதா இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டி ?

SOORIYANFMGOSSIP - இரத்து செய்ய படுகிறதா இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டி ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,282 Views
உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் எதிர்வரும் 24ம் திகதி மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. 
இந்தியாவின் மத்திய மந்திரி கிரிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா- பாகிஸ்தான் இடையே உறவுகள் நல்ல முறையில் இல்லை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயுள்ள கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது. இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கருத்து வெளியிடுகையில், ‘‘T20 ஓவர் உலகக்கிண்ண இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். பஞ்சாப் மாநில மந்திரி ஒருவர் அளித்த பேட்டி யில், ‘‘இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உலகக் கிண்ண போட்டியை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தானுடனான போட்டியை இரத்து செய்ய முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) உறுதியாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ.-யின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவிக்கையில் ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் 20 ஓவர் உலகக்கிண்ண போட்டிக்கு ஐ.சி.சி.யுடன் பி.சி.சி.ஐ. ஒப்பந்தம் செய்துள்ளது. போட்டியில் பங்கேற்போம் என உறுதி அளிக்கப்பட்டு விட்டது. எனவே இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்ய முடியாது. ஐ.சி.சி.யிடம் அளித்த உறுதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீற முடியாது. எந்த நாட்டு அணியுடனும் விளையாட முடியாது என்று மறுக்கவும் முடியாது. ஐ.சி.சி. தொடர்பான போட்டிகளில் இந்திய அணி நிச்சயமாக விளையாடும். இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top