Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
25
நகங்களின் அழகைப் பேண செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்...

Sooriyan fm Gossip - நகங்களின் அழகைப் பேண செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

312 Views
விரல் நகங்களை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நகங்கள் உடைந்து போதல் , விரல் நகங்களில் ஏற்படும் வெட்டுக் காயங்கள், நகங்களில் ஏற்படும் பிளவுகள் இவற்றை போக்க நகங்களின் பராமரிப்பு அவசியமாகின்றது.

அதற்கு நாம் என்னென்ன  செய்ய வேண்டும் என இப்போது பார்ப்போம். சிலருக்கு நகங்கள் அடிக்கடி உடைந்து போகின்றன. நம் நகங்கள் "க்ரோடின்" என்ற புரத வகையால் உருவாகிறது.

அவ் ஊட்டச் த்து குறைபாடு காரணமாக நகங்கள் உடைந்து போகின்றன. நகங்களை பராமரிக்காமையும் இதற்கு  ஓர் காரணமாகின்றது .

இதற்காக அழகு நிலையங்களை நாட வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக  வீட்டிலே கூட  இதனை செய்யலாம். நகங்களை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அப்போது தான் கிருமிகள் மற்றும் பக்டீரியாக்கள் இல்லாமல் இருக்கும். சுத்தமான தண்ணீரில் கைகளை கழுவிக் கொள்ள வேண்டும். நகங்களை மிகவும் நீளமானதாக வைக்காதீர்கள். நல்ல நிலையில் நல்ல வடிவத்தில் அதை வடிவமையுங்கள்.

ஏனெனில் நீளமாக வளர்த்துக் கொள்ளும் நகங்கள் உடைந்து போக வாய்ப்புண்டு. வாரத்திற்கு ஒரு முறையேனும் நகங்களை வெட்டி பராமரியுங்கள்.

நகங்களை வெட்டும் போது அவதானம் வேண்டும். ஏனெனில் நகங்களின் அடியில்  காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்படும். அதேபோல சிலருக்கு நகங்களை கடிக்கும் பழக்கம் உள்ளது. அது மிகவும் தவறானதாகும்.

இதனால் விரல்களில்  வெட்டுக் காயங்கள்  ஏற்பட  வாய்ப்புள்ளது. மேலும்  தொற்றுக்கள்  ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிறிய  தொற்றுகள்  கூட  நாளடைவில் பெரிய  பிரச்சினைகளை  விரல்களில்  ஏற்படுத்திவிடும்.

வலுவான நகங்களை பெற ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். உடையக் கூடிய நகங்களை வலுப்படுத்த விட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நகங்கள் ஈரமாகவும் அழுக்கு நிறைந்த சூழலிலும்  இருந்தால் அந்த இடத்தில் பக்டீரியாக்கள் உருவாகுவதை அதிகப்படுத்தும்.

அடிக்கடி பாத்திரங்கள் கழுவுவது, இரசாயன பொருட்களை கொண்டு சுத்தம் செய்வது போன்றவற்றால் நகங்கள் பாதிப்படைய அதிகம் வாய்ப்புள்ளது. முடிந்தவரை இதற்காக கையுறைகளை உபயோகித்தல் நன்று.  

மேற்சொன்ன ஆலோசனைகளை பின்பற்றி வந்தால் விரல்களும், நகங்களும் எப்போதும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top