Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
அழகு மிளிரச் செய்யும் ஒலிவ் எண்ணெய்..

SooriyanFM Gossip - அழகு மிளிரச் செய்யும் ஒலிவ் எண்ணெய்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

316 Views
ஒலிவ் எண்ணெயானது நம் தலைமுடி, முகம் உட்பட உடலை அழகுடன் மிளிரச் செய்கிறது.  இருந்தாலும் இதனை நாம் பொதுவாக  பயன்படுத்துவதில்லை.  இந்த ஒலிவ் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவதென்றும்,  இதன்  பயன்கள் எவை என்றும் இப்போது பார்ப்போம்.

குளிப்பதற்கு முன் ஒலிவ் எண்ணெயுடன் சற்று வினாகிரியை கலந்து சருமத்தில் பூசி அதனை ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வந்தால் சூரிய கதிரினால் சருமம் பாதிப்படைவதை தடுக்கலாம்.

இதனை தினமும் தூங்கும் முன் முகத்திற்கு பூசி வந்தால் முக சருமமானது மென்மையாக மாறிவரும். சூரியகதிரினால் ஏற்படும் சரும பாதிப்போ அல்லது தோல் வறட்சியோ ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் தன்மை இந்த ஒலிவ் எண்ணெய்க்கு உண்டு.

ஒரு தேக்கரண்டி ஒலிவ் எண்ணெயுடன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் பூசி சிறிது நேரம் மசாஜ் செய்து முப்பது நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும்.

பின் சருமத்தை வெது வெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும். இதனை வாரத்தில் இருமுறையேனும் செய்துவருதல் மிகவும் நன்று. தலையில் பொடுகு பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஒலிவ் எண்ணெயை பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சினையும் தீரும், முடியும் நன்கு அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.

சில பேருக்கு சருமத்தில் தழும்புகள் காணப்படும். அவர்களும் இந்த ஒலிவ் எண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி பின்னர் முப்பது நிமிடங்களின் பின்னர் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை செய்துவர சருமத்தில் காணப்படும் தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுக்கள் என்பன நாளடைவில் மறைந்து விடும். மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி சரும அழகினை பேணுவோம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top