தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில், படப்பிடிப்பு பற்றியும், இதில் நடிக்கும் ஹீரோக்கள் பற்றிய பல விசயங்களும் கசிந்து கொண்டிருக்கின்றன..
"தல55" என இப்போதைக்குக் குறிப்பிடப்படும் ,கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சிக்கிம்மில் நடைபெற்றது.
ஒருசில காரணங்களால் சின்ன மனகசப்புக்கு உள்ளாகி நீண்டநாட்கள் சேர்ந்து நடிக்காமல் இருந்த விவேக்கும், "தல"யும் இந்த படத்தில் சேர்ந்து நடிக்கின்றார்கள். இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள விமானத்தில் விவேக் சென்றிருக்கிறார்.அவரோடு "தல" அஜித்தும் அந்த விமானத்திலேயே ஒன்றாக பறந்திருக்கிறார்.
இந்தவேளையில் தான் "வாலி", "கிரீடம்" படங்களின் போது உள்ள பழைய நிகழ்வுகளை பேசிக் கொண்டே சென்று இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் திடீரென தனது கையில் இருந்த பெறுமதி வாய்ந்த வெளிநாட்டு கைக்கடிகாரத்தை கழற்றி, விவேக்கின் கையில் மாட்டிவிட்டதோடு "உங்களுக்கு என்னுடைய அன்பு பரிசு" என்று கூறி இருக்கிறார் அஜித்.
அதோடு மட்டும் நிறுத்தி விடவில்லை "தல".விமான நிலையத்தில் இறங்கி, படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு விவேக் உடன் காரில் ஒன்றாகவே பேசிக்கொண்டே பயணித்திருக்கிறார். அப்போது, காரின் ஒட்டுநர் ஒரு பழைய செல்போன் வைத்து பேசிக் கொண்டே காரோட்டுவதையும் அஜித் கவனிக்கத் தவறவில்லை.
செல்லும்வழியில் நகர்புறப்பகுதிக்குள் வண்டி நுழைந்தவேளையில், வண்டியை ஒரு இடத்தில் நிப்பாட்டுங்க என்று கூறி இறங்கிச்சென்ற அஜித், பக்கத்தில் உள்ள செல்போன் கடைக்கு சென்று ஒரு புதிய செல்போனை வாங்கி, கார் ஒட்டுநருக்கு பரிசாக அளித்திருக்கிறார்.பரிசளித்தது மட்டுமன்றி, இனிமேல் கார் ஒட்டும் போது ஹெட்போன் போட்டு தான் போன் பேச வேண்டும் என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார்.
இந்த நிலையில், தனக்கு அளித்த பரிசு மட்டுமன்றி, ஒட்டுநருக்கு அஜித் அளித்த பரிசையும் பார்த்து வாயடைத்து போய் விட்டாராம் விவேக்.
படத்தில் மட்டும் கருத்து சொன்னா போதாது.....
நம்ம நிஜவாழ்விலும் மற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்யப்பழகணும்னு "தல" தன்னோட ஸ்டைல்ல சொல்லியிருப்பாரோ........?