Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
பாதங்களை பராமரிக்க இதோ சில அருமையான குறிப்புக்கள் ..

Sooriyan fm Gossip - பாதங்களை பராமரிக்க இதோ சில அருமையான குறிப்புக்கள் ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

477 Views
பாதங்களை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் பாதங்கள் வழியே எளிதாக கிருமித் தொற்றுக்களும் ஏற்பட்டு விடும். எனவே பாதங்களை பராமரிக்க இதோ  சில ஆலோசனைகள்.

பாதங்களோ அல்லது உள்ளங்கால்களோ வறண்டு இருந்தால் நான்கு துளி கிளிசரீனுடன் நான்கு துளி எலுமிச்சை சாற்றை கலந்து தூங்க செல்லும் போது நகம், விரல்கள் பாதம் முழுவதும் தடவி காய்ந்தவுடன் துணியாலான காலுறை அணிந்து கொண்டு உறங்கலாம்.

அதேபோல பாலில் தோய்த்தெடுத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமலும் மினுமினுப்பாகவும் இருக்கும். குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெயை கலந்து நன்றாக தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.

வெதுவெதுப்பான நீர் நிறைந்த ஓர் பாத்திரத்தில் ஷாம்பு , உப்பு மற்றும் எலுமிச்சம்பழத்தின் சாற்றை விட்டு அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை அமிழ்த்தி வைத்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி நன்றாக துடைத்து விடவும்.  

அதேபோல சிறிது கற்றாழை  ஜெல்லுடன் கடலை மாவை கலந்து மிக்ஸியில் அரைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உள்ளங்கால், பாதம், கணுக்கால் முழுவதும் தேய்த்து கழுவிவர காயத்தால் ஏற்படட தழும்புகளும் கருமை நிற அடையாளங்களும் மறைந்து சருமம் இயல்பான நிறத்துக்கு மாறும். மேலும் நான்கு துளி விளக்கெண்ணெயை உள்ளங்கையில் எடுத்து கொண்டு நன்றாக சூடு பறக்க பாதங்களில் தேய்த்து வர பாதம் மினுமினுப்பாக  மாறும். அதேபோல மாதம் இருமுறை வெள்ளை எள்ளை அரைத்து பாதங்கள் மற்றும் நகங்களில் போட்டு கழுவ வேண்டும்.

இது நகத்தின் இடுக்குகளில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி நல்ல பளபளப்பை கொடுக்கும். மேலும் காலணிகளையும் சரியான அளவில் அணிவதுடன் தரமானதாகவும் சௌகரியமானதாகவும் வாங்கி அணியவேண்டும். இதனால் பாதமும் கறுத்து போகாமல் இயல்பாய் இருக்கும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பாதங்களின் அழகை பேணுவோம்.

 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top