Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
மூக்குக்கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகள் மறைய இதோ அழகு குறிப்புகள்..

SooriyanFM Gossip - மூக்குக்கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகள் மறைய இதோ அழகு குறிப்புகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

457 Views
இப்போதெல்லாம் ஆண்களும் பெண்களும் கண்ணாடி அணிந்துகொள்ளும்  எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகிறது. கண் பார்வைக்குறைபாட்டுக்கு காரணம் கண்களுக்கு தேவையான ஊட்டச்  சத்துக்கள் உடலில் போதிய அளவு இல்லை என்பது தான்.
இதனாலே பலரும் சிறுவயதிலேயே கண்பார்வை குறைபாட்டினால்  பாதிப்புறுகின்றனர். இம்மாதிரியான பிரச்சினைகளை தவிர்க்க ஆரோக்கியமான மற்றும் ஊட்டிட சத்துக்கள் நிறைந்த உணவுவகைகளை உட்க்கொள்ள வேண்டும்.

கண்பார்வை குறைபாட்டினால் தொடர்சியாக கண்ணாடி அணிவதால் மூக்கு பகுதியில் தழும்புகள் ஏற்படுகிறது. இந்த தழும்புகள் குறைய சில அழகு குறிப்புகள். அரை வெள்ளரிக்காயை வெட்டி அவற்றில் இருக்கும் தோல் பகுதியை சீவி தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதேபோல ஒரு தாக்களிப்பழத்தையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் இட்டு  களிபோல் வரும் வரை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இனி இரண்டு தேக்கரண்டி வெள்ளரி பேஸ்ட் , ஒரு தேக்கரண்டி தக்காளி பேஸ்ட், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி கிளிசரின் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதனை தழும்புகள் ஏற்படட இடத்தில் பூசிக்கொள்ளவும். இதனை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் பூசி மறுநாள் காலையில் முகத்தை கழுவி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

அதேபோல உருளைக் கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை எடுத்து அவற்றில் இருக்கும் தோல்பகுதியை சீவி வடட வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இந்த துண்டுகளை தழும்புகள் உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.  

அப்படியே செய்து பதினைந்து நிமிடங்களின் பின்பு குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர மூக்கு கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top