Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
பாலில் உள்ளடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்!

SooriyanFM Gossip - பாலில் உள்ளடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

281 Views
பொதுவாகவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மிக பெரிய சவாலாக இருப்பது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் தான். சீரான முறையில் உடல் எடையைக் குறைக்க தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் செய்வதுடன், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். தினமும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், வெறும் உடற்பயிற்சியை மட்டும் செய்வதால் உடல் எடை குறையாது என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்.

உடல் எடையைக் குறைக்கும் போது சில முக்கிய உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும், சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில், உடல் எடையை குறைப்போர் பால் குடிக்கலாமா? கூடாதா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இதை பற்றிய விரிவான விளக்கத்தை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

 பால் உடலுக்கு நல்லதா? பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது நிச்சயம் ஆரோக்கியமான ஒன்று தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இதில் நிறையுற்ற கொழுப்பும், அதிக கலோரிகளும் உள்ளன. இது தான் பலருக்கும் சந்தேகத்தை உண்டாக்குகிறது. 250 மி.லி (1 கப்) பாலில் 5 கிராம் கொழுப்பும், 152 கலோரிகளும் உள்ளது. குறைந்த கலோரி டயட்டை பின்பற்றுவோர் பால் மற்றும் பாற் பொருட்களை எடுத்துக்கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வருவார்கள்.

 பால் உடல் எடையைக் கூட்டுமா? சாதாரண முறையில் உடல் எடையை குறைப்போருக்கு பால் குடிப்பதால் எடை கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக இது சிறிது எடையைக் குறைக்க உதவும்.

பாலில் அதிக புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மேலும் இதில் ஜிங்க், மெக்னீசியம், கல்சியம், Vitamin b12 மற்றும் Vitamin D போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளது. இவை அனைத்தும் எலும்புகளை வலுவாக்கவும், எதிர்ப்பு சக்தியை கூட்டவும், உடலின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். எனவே தினமும் குறிப்பிட்ட அளவு பால் குடிப்பதால் உடலுக்கு நன்மை மட்டுமே கிடைக்கும்.

 ஆய்வுகள் கூறுவது என்ன? 2004 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த கலோரி டயட்டை பின்பற்றுவோர் தினமும் 3 முறை பால் அல்லது பால் சார்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டதால் உடல் எடையை குறைக்க அதிகம் உதவுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

எனவே பாலினை தவிர்ப்பவர்களை விட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு வருவோர் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பால் குடிப்பதால் உடற் பருமன்,  உடல் செயல்திறன் பாதிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top