Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
10
ரோஜா இதழ்கள் தரும் அசத்தலான அழகு குறிப்புகள்..

SooriyanFM Gossip - ரோஜா இதழ்கள் தரும் அசத்தலான அழகு குறிப்புகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

374 Views
ரோஜா இதழ்களை நாம் சருமத்திற்கு பயன்படுத்துவதால், சருமமானது  நாள் தோறும் பொலிவினை பெறுகிறது. சருமம் மென்மையுடனும் காணப்படும். ரோஜா இதழ்கள்  எவ்வாறு அழகை தருகின்றது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

முதலில் ரோஜா இதழ்களை எடுத்து சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பின்னர் அதனுடன் ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பசும்பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை முகத்தை நன்றாக கழுவிய பின்னர் முகத்திற்கு பூசுதல் வேண்டும். அப்படியே பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர் முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இதனை வாரத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர முகமானது அழகுடனும் பொலிவுடனும் மாறி வரும். அதேபோல முகப்பருக்கள் மறைய அரைத்த ரோஜா இதழ்களை ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வர முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் என்பன மறைந்து விடும்.  இதனை தினமும் செய்துவருதல் நன்று.

அதே போல ஒரு வடிகட்டியை எடுத்து அதில் அரைத்த ரோஜா இதழ்களை வடிகட்டி அதில் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து உதட்டில் பூசி வந்தால் உதடு மென் சிவப்பாக மாறி அழகை கொடுக்கும். இதனை வாரத்தில் இரு முறையேனும் செய்து வாருங்கள் .

மேலும் சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் மறைய ஒரு தேக்கரண்டி அரைத்த ரோஜா இதழ்களுடன் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து அதனை முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் வரை காத்திருந்து பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி முக அழகை பேணுவோம்.

 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top