Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
கேரள பெண்களின் அழகின் இரகசியம் - அசத்தலான அழகு குறிப்புகள்..

SooriyanFM Gossip - கேரள பெண்களின் அழகின் இரகசியம் - அசத்தலான அழகு குறிப்புகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

325 Views
பெண்களின் கனவு எப்போதும் நீளமான, கருமையான கூந்தலும், மீன் போன்ற அழகான கண்களும், மென்மையான சருமமும் தான். ஆனால் இது எவ்வாறு சாத்தியப்படும் என்பது இயற்கையுடன் சம்பந்தப்பட்டது  மட்டுமல்ல. நம் கையிலும் தான் உள்ளது.

சிலரால் அவர்களது முகத்தைக்கூட சரிவர அழகாக பேண முடிவதில்லை. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கண்ட கண்ட கிரீம் வகைகளை முகத்தில் பூசுவது தான். சரும அழகை பேண விரும்பினால் இயற்கை பொருட்களையே பயன்படுத்துங்கள்.

குறிப்பாக சருமம் பட்டு போல் இருப்பதற்கு மஞ்சள் மிக சிறந்த ஓர் இயற்கை பொருள் ஆகும். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுதும் பூசி குளிக்க வேண்டும். இதனால் முகத்தில் பருக்கள் தோன்றாது. இதற்கு  ஓர் எடுத்துக்காட்டாக   கேரள பெண்களை  குறிப்பிடலாம்.

கேரளத்து பெண்களின் அழகின் இரகசியம் இது தான் . அவர்கள் தினமும் தங்கள் தலைக்கு கலப்படம் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவார்கள். மேலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்து ஷாம்பு ஏதும் பயன்படுத்தாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள்.

அதேபோல அவர்கள் கடைகளில் விற்கும் கிரீம் வகைகளை சருமத்திற்கு பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக கஸ்தூரி மஞ்சளையே பயன்படுத்துவார்கள். இது தான்  அவர்களின் சரும அழகின் இரகசியம். அதே போல் தினமும் சருமத்திற்கு கற்றாழை ஜெல்லினை பயன்படுத்துவார்கள்.

அதாவது சருமத்தில் கற்றாழை ஜெல்லினை பூசி நன்றாக மசாஜ் செய்வார்கள். பின் பத்து நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரால் இந்த முறையினை தொடர்ந்து பின்பற்றுவார்கள். இதனால் சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது.

இதனால் சருமம் மென்மையும் அழகும் பெறுகிறது. அவர்கள் மேனிக்கு சோப் வகைகள் பயன்படுத்துவதில்லை. மேலும் கடலைமாவு கேரள பெண்களின் அழகு சாதன பொருளாகும்.

கடலை மாவுடன் தயிர், பால் போன்றவற்றை சேர்த்து முகத்திற்கு பூசுவார்கள். இதனால் சருமம் மென்மையடையும். மேலும் சருமம் பளிச் என்றும் மாறிவரும். எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி மேனி அழகை பேணுவோம்.

 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top