தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “வீரா” படத்தில் நடிகை மீனாவுடன் இணைந்து நடிகை ரோஜாவும் நடித்திருந்தார்.அப்போதிருந்தே நடிகை மீனாவும் நடிகை ரோஜாவும் நெருங்கிய தோழிகளாக வலம்வந்தனர்.இந்நிலையில் தற்போது 49 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரோஜாவிற்கு நடிகை மீனா தன்னுடைய பாணியில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகை ரோஜா தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு பிரபலங்கள்,ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.