Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
கூந்தல் அழகுக்கு கூடவே கைகொடுக்கும் செம்பருத்தி எண்ணெய்...

SooriyanFM Gossip - கூந்தல் அழகுக்கு கூடவே கைகொடுக்கும் செம்பருத்தி எண்ணெய்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

341 Views
செம்பருத்தி என்பது இயற்கை தாவரங்களில் ஒன்றாகும். பலவகை மருத்துவ குணங்களை கொண்டது. அதிக குளிர்ச்சி தன்மையும் உடையது. மேலும் தலை முடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடிவளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியம் என்று பலவகையான கூந்தல் பிரச்சினைகளுக்கு செம்பபருத்தி எண்ணெய் நல்ல தீர்வினை வழங்குகிறது. தலைமுடி நன்கு வளரவும் இந்த செம்பருத்தி எண்ணெய் நன்கு கைகொடுக்கிறது.

இந்த செம்பருத்தி எண்ணெய்யானது சந்தையில் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்தாலும் அவையெல்லாம் இயற்கையான முறையில் தயாரிக்க படுகிறதா என்று நமக்கு தெரிவதில்லை. சரி இந்த செம்பருத்தி எண்ணெயை இயற்கையான முறையில் வீட்டில் எவ்வாறு செய்வது என்று இப்போது பார்ப்போம். இதற்கு தேவையானவை

(1) செம்பருத்தி பூ - 10
(2) செம்பருத்தி இலை -10
(3) தேங்காய் எண்ணெய் - 1/2  லீட்டர்
(4) வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
(5) கருவேப்பிலை - ஒரு கைப்பிடி     அளவு

மேலே குறிப்பிடப்படடவற்றில் உலர்ந்த பத்து செம்பருத்தி பூக்களையும் பத்து செம்பருத்தி இலைகளையும் சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் ஒன்றாக போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனை அடுப்பில் அரை லீட்டர்  தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்த கலவையை எண்ணெய்யில் சேர்க்க வேண்டும்.

பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் எண்ணெய்யில் சிறிதளவு வேப்பிலையை சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் வேப்பிலையை சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. பின்னர் இந்த எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலை சேர்க்க வேண்டும். கருவேப்பிலை முடிஉதிர்வு பிரச்சினையை சீர் செய்து முடியை நன்கு வளர செய்கிறது.

செம்பருத்தி, வேப்பிலை, கருவேப்பிலை என்பன நன்றாக எண்ணெயில் சேர்ந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்பு இந்த செம்பருத்தி எண்ணெய்யை நன்றாக ஆற வைத்து அதனை வடிகட்டி சுத்தமான குவளை ஒன்றினுள் விட்டு வைக்கவேண்டும். இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலையில் குளிக்க வேண்டும். அதுமட்டுமன்றி இதனை தினசரி எண்ணெய் போலவும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் பயன்படுத்தி பயன் பெறலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top