Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
உலகின் பணக்கார நாயின் மாளிகை விற்பனை - விலை இத்தனை கோடியா!

SooriyanFM Gossip - உலகின் பணக்கார நாயின் மாளிகை விற்பனை - விலை இத்தனை கோடியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

778 Views
உலகின் ஆடம்பரமான மாளிகைகள் மற்றும் வீடுகள் எக்கச்சமான விலைக்கு விற்பனையாகிறது என்று செய்திகள் அவ்வபோது வெளிவந்து ஆச்சரியப்படுத்தும். மியாமியில் விற்பனையான ஒரு மாளிகைப் பற்றி தற்போது வெளியான செய்தி உலகம் முழுவதும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. 

விற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மாளிகையின் விலை 32 மில்லியன் டொலர் என்பதைத் தாண்டி, இந்த மாளிகைக்கு சொந்தக்காரர் ஒரு நாய் என்பது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மியாமியில் இருக்கும் டஸ்கன் ஸ்டைலில் கட்டப்பட்டிருந்த, இந்த நாய்க்குச் சொந்தமான மேன்ஷன் 238 கோடி ரூபாய்க்கு விற்பனையாக இருக்கிறது. நாய்களின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்களை யார் எழுதியது என்பது பற்றிய தகவலை தேடும்போது ஆச்சரியமூட்டும் பல செய்திகள் கிடைத்தன.

கர்லோட்டா லெய்பென்ஸ்டீன் என்ற ஜெர்மனியை சேர்ந்த பெண்மணி, கந்தர் III நாயை வளர்த்து வந்துள்ளார். 1992 ஆம் ஆண்டில், கர்லோட்டா இறக்கும் முன், ஒரு டிரஸ்ட் உருவாக்கி 58 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்தை தனது வளர்ப்பு நாயின் பெயரில் மாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஒரு குழு நியமிக்கப்பட்டு, கந்தர் III இன் வம்சாவளியை அனைத்து வசதிகளோடும் பராமரித்து வருகிறது. கந்தர் குழுவில் இயங்கும் இத்தாலிய நாட்டு வணிகர்களால் இந்த டிரஸ்ட் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

விற்பனையான இந்த மாளிகை, 2000 ஆம் ஆண்டு ஹொலிவுட் நட்சத்திரமான மடோனாவிடம் இருந்து 7.5 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட போது, இந்த மாளிகையின் சொந்தக்காரர் ஒரு நாய் என்பதை அறியவில்லை என்று, பல ஆடம்பர மாளிகைகளை விற்பனை செய்த அசோலின் டீம் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ரூத்தி ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top