Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
முதலமைச்சருக்கு திரைத்துறை சார்பாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்

SooriyanFM Gossip - முதலமைச்சருக்கு திரைத்துறை சார்பாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

265 Views

  மாநாடு திரைப்படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றினை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

   திரைத்துறையானது நீண்ட நாட்களாக நலிவடைந்து விட்டது.திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்து விட்டது. அந்த காரணத்திலிருந்து வெளியே வர பெரிய திரைப்படங்கள் உதவுகின்றன. உதாரணமாக அண்ணாத்த திரைப்படம் உள்ளது. திரையரங்குகளில் ஐம்பது இருக்கை என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்பினை தந்துள்ளது. இந்த விடயம்
திரைத்துறையினருக்கு மகிழ்ச்சி தந்தது.

எனினும் தற்போது , தற்போது Vaccination செலுத்திக் கொண்டால் மட்டும் தான் திரையரங்குகளுக்கு அனுமதி தரப்படும் என்பது திரைத்துறையினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் தடுப்பூசியானது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை.

அந்தவகையில் பாடசாலைகளிலும் பொதுவான சில இடங்களுக்கும் போய் வர அனுமதித்துள்ளார்கள். தங்களின் ஆட்சியில் Vaccination சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது.

எனினும், தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் எனும் உத்தரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும். தயவுகூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம்.

விரைவாக முடிவெடுத்து திரையுலகையும் திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்.’என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top