Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
வெள்ளரிக்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்வதன் நன்மைகள்!

Sooriyan Gossip - வெள்ளரிக்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்வதன் நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

373 Views
நீர்சத்துள்ள காய்கள் அனைத்துமே உடல் நலனுக்கு நன்மையளிக்கும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், போன்றவற்றை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.

இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணமுடையது. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது.

* வௌ்ளரிக்காயில் மிகக் குறைவான கலோரி அளவே காணப்படுவதுடன், உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது.  

* நீர் அருந்துவதற்கு நேரம் கிடைக்காமல் இருந்தால், வௌ்ளரிக்காயை சாப்பிடலாம். இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுவதனால், இது நீர் அருந்தாமையை ஈடுசெய்யக்கூடியதாகும்.

* வௌ்ளரிக்காயை உண்பதனால் உடலில் ஏற்படும் உடல் உஷ்ணத்திற்கு நிவாரணமளிப்பதுடன், வௌ்ளரிக்காய்ச் சாற்றை சருமத்தில் தடவினால், சூரிய கதிர்களில் இருந்து எமது சர்மத்தை பாதுகாக்கும் தன்மையுடையது.

* வௌ்ளரிக்காயை அதிகளவில் எமது உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரைய வைக்கும் தன்மையைக் கொண்டது.

* வௌ்ளரிக்காயில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான பல Vitaminகள் அடங்கியுள்ளமையினால், வௌ்ளரிக்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், எமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதுடன், எமது ஆற்றல் திறனையும் ஊக்குவிக்கும் Vitaminகளான “A,B,C” ஆகியன  இதில் அதிகம் உள்ளடங்கியுள்ளன.

* வௌ்ளரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிடவேண்டும். தோலில் தான் Vitamin “C” அதிகமாகக் காணப்படுகின்றது.

* வௌ்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு சிறந்த உணவாகும். இதனை சூப் அல்லது செலட்களில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top