Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
தலைமுடி அரிப்பா? இதோ சூப்பர் டிப்ஸ்..

Sooriyan fm Gossip - தலைமுடி அரிப்பா? இதோ சூப்பர் டிப்ஸ்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

403 Views
இன்றைய பதிவில் தலைமுடி அரிப்பை போக்க சூப்பரான டிப்ஸை  படித்து தெரிந்து கொள்வோம். எப்போதும் தலை முடியில் அரிப்பு போன்ற பிரச்சினை இருப்பது நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்க செய்யும். அத்துடன் தலைமுடியின் வேர்ப் பகுதிகளையும் பாதித்து முடியினை வளர விடாமலும் செய்கிறது.
நம் தலைமுடியில் அரிப்பு போன்ற பிரச்சினை எதனால் வருகின்றது என்றால் தலைமுடியானது எப்போதும் வறண்ட நிலையில் இருப்பதாலும் பொடுகு, பக்ற்றீரியா  போன்ற பல வித நோய்களாலும் தான் இவ்வித  பாதிப்புகளை அடைகிறது. முடி அரிப்பு இருக்குமாயின் அதில் அக்கறை கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பெண்களுக்கும் தலைமுடியானது முக்கியமான ஒன்றாகும். இதற்கு தேவையானவை ஒரு கைப்பிடி வேப்பிலை , நான்கு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு சிறிய துண்டு இஞ்சி , அரை குவளை தண்ணீர் ஆகியனவாகும்.

தலைமுடியில் அரிப்பு நீங்குவதற்கு முதலில் ஒரு குவளை அளவிற்கு வேப்பிலையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் இட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றினையும் இட்டு அதனுடன் இஞ்சி துண்டினையும் தண்ணீரையும் சேர்த்து நான்கு அரைத்துக் கொள்ளவும்.

அவ்வாறு அரைத்த பின்னர் வடிகட்டியால் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது அதனை தலைமுடி வேர்களில் நன்கு படும் அளவிற்கு பூசுதல் வேண்டும்.  அதன் பின் இரண்டு மணித்தியாலங்கள் பின்னர் தலையை கழுவிக்கொள்ளலாம். இதனை வாரத்தில் ஒரு முறையாவது பின்பற்றி வாருங்கள்.

இதனால் அரிப்பு பொடுகு தொல்லை முற்றாக நீங்கும். வேப்பிலையில் இருக்கும் கசப்பு தன்மை தலைமுடியில் இருக்கும் அரிப்பு பிரச்சினைக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் . அதேபோல  எலுமிச்சை சாறு தலையில் இருக்கும் பேன், பொடுகு, போன்றவற்றிலிருந்து விடுவித்து தலை முடியை சுத்தமாக வைத்திருக்கும்.

அதேபோல இஞ்சியானது மருத்துவ குணம் மிக்க ஒன்றாகும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். இஞ்சியானது தலைமுடியை சுத்தமாக்க வைத்திருக்கும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி தலைமுடி அரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்போம் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top