Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
புதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்!

SooriyanFM Gossip - புதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

404 Views
புதினா ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் மருத்துவப் பயன்களை அறிந்துகொண்டால் தொடர்ந்தும் பயன்படுத்தலாம்.

புதினாக் கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், Carbohydrate, Phosphorus, கல்சியம், இரும்புச்சத்து, Vitamin A, ஆகிய சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதனைப் பயன்படுத்தினாலும் இதன் பொதுக் குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.

அசைவ உணவு வகைகள் மற்றும் கொழுப்பு உணவுகளை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தத்தை சுத்தமாக்க, பசியைத் தூண்ட, மற்றும் பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீர மற்றும் ஆண்மைக்குறைவை நீக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீழ்வாத வலிகளின் வேதனை குறையும். மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும். புதினாச் சாறு, பூண்டுச் சாறு, எலுமிச்சைச் சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top