Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
01
குழந்தையின் பற்களை பராமரிப்பது பற்றிய அழகு குறிப்புக்கள்

Sooriyan fm Gossip - குழந்தையின் பற்களை பராமரிப்பது பற்றிய அழகு குறிப்புக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

252 Views
குழந்தைகளின் மழலை சிரிப்பிற்கு மயங்காதவர் யாருமே இருக்க மாட்டார்கள். குழந்தைகளின்  பற்களை ஆரம்பத்திலிருந்தே பராமரிப்பது அவசியமாகின்றது. இதில் பெற்றோர் கரிசனை கொள்ளுதல் வேண்டும்.
தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகளின் பல் பராமரிப்பு பற்றிய சில முக்கிய தகவல்கள் இங்கே தரப்படுகிறது. சில குழந்தைகளின் பற்கள் முளைக்கும் போது நேர் சீராக முளைப்பதில்லை.

அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம். குழந்தையானது  பால் குடித்து முடிந்த ஒவ்வொரு தடவையும் நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் பல் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கெனவே  பிரத்தியேகமாக விற்பனையாகும் டூத்பிரஸ்  மற்றும் பற்பசை காலை, மாலை என இருவேளைகளிலும்  பல் துலக்கி விடவும்.

அப்படியே மெதுவாக நாக்கினையும் சுத்தம் செய்துவிட வேண்டும். பெரும்பாலான தாய்மார் இரவுநேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்கவைப்பார்கள். அதனால் இரவு முழுவதும் குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பானது  பாக்டீரியாக்களுடன் சேர்ந்து வினைபுரிய வாய்ப்பிருக்கிறது.

இந்நிலைமை தொடர்ந்தால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பற்சொத்தை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. சிறுவயதில் குழந்தைகளின் பற்களில் பிரச்சினை உண்டானால் நிரந்தரப்பற்கள் முளைக்கும் போது சரியாகிவிடும் என நினைப்பது பெற்றோர்களின் தவறான ஓர் எண்ணமாகும் .

பால் பற்கள் நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி தான் வளர்கின்றன என்பதால் இதுவிடயத்தில் பெற்றோர் கவனம் கொள்ள வேண்டும். குழந்தைகள் விரல் சூப்புவது , நாக்கினை அடிக்கடி கடித்துக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை அடிக்கடி செய்துகொள்வதால் அவர்களுக்கு சீரற்ற பல்வரிசை அமைந்துவிடுகிறது.

இதனால் முக அழகே கெட்டுவிடும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி குழந்தைகளின் பற்களை பராமரித்தால் குழந்தைகளின்  முகம் மிகவும் அழகானதாக  இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top