Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
24
ஒரே வாரத்தில் சருமம் அழகு பெற, கொய்யா பழத்தின் தோல் தரும் நன்மைகள்..

Sooriyan fm Gossip - ஒரே வாரத்தில் சருமம் அழகு பெற, கொய்யா பழத்தின் தோல் தரும் நன்மைகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

426 Views
கொய்யா பழம் மருத்துவ குணம் நிறைந்த ஓர் பழமாகும். குறிப்பாக நோய் எதிர்ப்பு ஆற்றல், நல்ல ஜீரண சக்தி ஆகியவற்றை அளிக்கக் கூடிய விட்டமின்களும் தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.
ஆனால் கொய்யாப்பழம் அழகை அதிகரிக்கவும் சருமத்தை பளபளப்பாகவும் மாற்ற கூடிய திறன் கொண்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு  தெரியும். ஆம் உண்மைதான். கொய்யா பழத்திலுள்ள   விட்டமின்களான  'ஏ ',  'பி' மற்றும் 'சி' நம் உடலில் கொலாஜன் என்கின்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.

இதனால் சூரியனின் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது. சரி, இந்த கொய்யாபழத்தின் தோலானது சருமத்தை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதை பற்றி இப்போது பார்ப்போம். மிளிரும் சருமம் பெற தேவையான கொய்யாவின் ஆக்ஸியனேற்ற  தடுப்பான்களான ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிக அளவில் உள்ளன.

இது உங்கள் சருமத்தை ஒளிர செய்யும். சருமத்தை தளர்த்தி மென்மையாக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை வாரம் ஒரு முறை பின்பற்றி வந்தால் நல்ல பலன் தெரியும். இதற்கு தேவையானவை
*தேன் ஒரு - தேக்கரண்டி
*கொய்யாப்பழ தோல் - சிறிதளவு

முதலில் கொய்யா பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும். சீவப்படட தோலை மிக்ஸியில் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த பசையுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இதனை முகத்தில் பூசி இருபது நிமிடம் அப்படியே விட வேண்டும். பின்பு இருபது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவ வேண்டும். கொய்யாவிலுள்ள நீர்ச்சத்து  உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு தோலுக்கு மிருதுவானதும் ஆரோக்கியமானதுமான தோற்றத்தையும் அளிக்கிறது.

எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி கொய்யா  பழத்தின் தோல்களின் மூலம் சரும அழகை அதிகரித்து கொள்வோம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top