புதிய தலைமுறை நடிகர்களில் தனுஷ் முன்னணி நட்சத்திரமாவார். படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பினால் தனுஷ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். நடிப்பில் அதிக கவனம் செலுத்தி தனது முயற்சியால் வளர்ந்து வந்தவர் அவர்.
பாலிவுட்டை தாண்டி இப்போது ஹாலிவுட் வரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய தனுஷ், ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் என்பவரது இயக்கத்தில் 'அட்ரங்கி ரே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். அடுத்து தனுஷின் நடிப்பில் 'The Gray Man' , 'மாறன் திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' என அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியாகவுள்ளன.
இந்த நிலையில் இப்போது தனுஷின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்திற்கு 'வாத்தி' என பெயரிட்டுள்ளார்கள்.
இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.